மாத்தி யோசித்த கணக்கு வாத்தியார் - பைஜூ ரவீந்திரன் கோடீஸ்வரர் ஆன கதை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னூர்: போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்த பள்ளிக்கூட வாத்தியார் போரடித்துபோய் பின்பு சாதாரண கார்டூன் கதாபாத்திரங்களை வைத்து இணையதளத்தின் மூலமாக பயிற்சியளிக்க ஆரம்பித்து தற்போது இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பின்பு பைஜூ என்னும் செயலியை ஆரம்பித்து அதில் வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்களான தி லயன் கிங்கில் வரும் சிம்பா என்னும் சிங்கத்தையும், ஃப்ரோஸனில் வரும் அன்னா என்ற பெண் கதாபாத்திரத்தையும் வைத்து 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலத்தை கற்றுத்தந்து இன்றைக்கு இளம் இந்திய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

பைஜூ செயலி கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கடந்த 2016ஆம் ஆண்டில் தன்னுடைய அறக்கட்டளையின் சார்பாக சுமார் 332 கோடி ரூபாய் நிதியுதவு அளித்துள்ளார். வரும் காலத்தில் இது நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று உணர்ந்தே நிதியுதவி அளித்திருக்கிறார்.

அல்ஜீப்ரா ராப்
 

அல்ஜீப்ரா ராப்

நான் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமென்று என்றைக்கும் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக லட்ச மனங்களின் சிந்தனை மற்றும் கற்றலை மாற்றவே விரும்புகிறேன், இதுவே பைஜூ (Byju's) ரவீந்திரனின் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம். நமக்கெல்லாம் அல்ஜீப்ரா என்றால் அடிவயிற்றில் பேதியாகும், ஆனால் பைஜூ ரவீந்திரனோ அசால்ட்டாக அல்ஜீப்ராவை ராப் பாடலாக பாடி அசத்தும்போது அனைவரின் வாய் வழியாக ஈ நுழைந்து வெளியேறும்.

நூற்றுக்கு நூறுதான்

நூற்றுக்கு நூறுதான்

கடவுளின் தேசமாக கருதப்படும் கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்திலுள்ள அழிகொடே என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் 37 வயதான பைஜூ ரவீந்திரன். பெற்றோர் ஆசிரியர்களாக இருந்ததால் இவருக்கும் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது இயற்கையே. பள்ளிப் பருவத்தில் ஹாக்கி மற்றும் ஃபுட்பால் விளையாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். பின்னர் 2003ஆம் ஆண்டு ஐஐஎம் (IIM) எனப்படும் போட்டித் தேர்வில் எதேச்சையாக கலந்து கொள்ள நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார்.

தவம் கிடந்தனர்

தவம் கிடந்தனர்

போட்டித் தேர்வில் வெற்றி பெற்றாலும், கல்லூரியில் சேர முடியவில்லை. இருந்தாலும் அந்த அனுபவத்தை வைத்தே பின்பு தன்னுடைய நண்பர்களுக்கும் கற்பிக்கத் தொடங்கினார். இவரிடம் கற்ற நண்பர்கள் அனைவரும் போட்டித் தேர்வில் ஜெயிக்க தன்னுடைய திறமையை மீண்டும் பரிசோதிக்க எண்ணி மீண்டும் தேர்வெழுத அதிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து பைஜூ ரவீந்திரனின் புகழ் பரவ, வார இறுதி நாட்களில் அருகிலுள்ள நகரங்களுக்கும் சென்று கற்பிக்கும் அளவிற்கு பைஜூ ரவீந்திரன் மிகப் பிரபலமானார். பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான செமினார் வகுப்பும் எடுக்காத பைஜூ ரவீந்திரனுக்காக பல்வேறு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவம் கிடந்தனர் என்றால் அவரின் திறமையை பார்த்துக்கொள்ளுங்கள்.

திங்க் அண்டு லேர்ன்
 

திங்க் அண்டு லேர்ன்

பைஜூ ரவீந்திரனின் அனுகுமுறையே சிந்தித்து அதன் பின்பு கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான். இதை அடிப்படையாக வைத்தே திங்க் அண்டு லேர்ன் (Think & Learn) என்னும் அமைப்பையும் உருவாக்கினார். அதன் மூலம் ஆன்லைனில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கினார். மிக எளிய முறை விளக்கங்களுடன் கூடிய இந்த பைஜூ செயலியை தொடங்கிய நான்கு ஆண்டுகளிலேயே சுமார் 3.5 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவற்றில் சுமார் 24 லட்சம் பேர்களிடம் இருந்து ஆண்டுக்கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ .12 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதுவே இந்த அமைப்பை கடந்த 2018-19ஆம் ஆண்டின் லாபகரமான தொழிலாக மாற்றியது என்று சொல்லலாம்.

பாடத்தில் கவனம்

பாடத்தில் கவனம்

பொதுவாகவே பாடம் நடத்துபோது நமக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு இல்லாவிட்டால், தூக்கம் கண்ணை சுழற்றும். அதாவது குழந்தைகளின் கவனத்தை கவர வேண்டுமென்றால் நாம் அவர்களோடு கலந்துவிடவேண்டும் அல்லது அவர்களை ஈர்க்கும் வகையில் நம்முடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. பைஜூ ரவீந்திரனின் அனுகுமுறையும் அதேதான். குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடத்தின் உள்ளர்த்தத்தை மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கு பாடத்தின் மீது உற்சாகமாகவும் ஆழ்ந்தும் கவனத்தை செலுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார்.

இணையதளத்தில் பதிவேற்றம்

இணையதளத்தில் பதிவேற்றம்

திங்க் அண்டு லேர்ன் அமைப்பு கொடுத்த தன்னம்பிக்கையும் வெற்றியும் இணைந்து ரவீந்திரனை 2015ஆம் ஆண்டில் பைஜூ'ஸ் (Byju's) என்ற செயலியை தொடங்க வைத்தது என்று சொல்லலாம். பைஜூ செயலியின் மூலம் எல்கேஜி வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்களுக்கு மிக எளிதான முறையில் செயல்முறை விளக்கம் போன்றவற்றை கற்றுத் தர ஆரம்பித்தார். கூடவே உயர் கல்வி மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பாடத்திட்டங்களையும் அதன் செயல்முறை விளக்கங்களையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதற்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சொத்து மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி

சொத்து மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி

இன்றைக்கு மொபைல் ஃபோன்களின் பயன்பாடும், இணைய தளப் பயன்பாடும் வேகமாக வளர்ந்து வருகிறது. இணையவழிக் கல்விதான் பைஜூ நிறுவனத்தின் அடிப்படையாக உள்ளது. இந்தியாவில் இணையவழிக் கற்றல் சந்தை வரும் 2020ஆம் ஆண்டில் இரு மடங்காக அதாவது சுமார் 5.7 பில்லியன் டாலராக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லவேண்டுமானல் ரூ.37 ஆயிரம் கோடியாக இருக்கக்கூடும் என்று இந்தியா பிராண்ட் ஈக்விட்டி ஃபவுண்டேஷன் (India Brand Equity Foundation) தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கல்விக்கான செயலிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்விக்கான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று பைஜூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் தெரிவித்துள்ளார்.

சிம்பாவும் அன்னாவும்

சிம்பாவும் அன்னாவும்

பைஜூ செயலிதான் தற்போது இந்தியாவில் கல்வி சார்ந்த மிக முக்கியமான ஸ்டார்ட் அப் ஆகும். கற்றலைக் காதலிப்போம் (Fall in love with learning) என்பதுதான் பைஜூவின் டேக்லைன். ரவீந்திரனின் பைஜூ செயலியில் டிஸ்னியின் கதாபாத்திரங்களான லயன் கிங் (The Line King) கதையில் வரும் சிம்பா என்றும் குட்டி சிங்கமும், ஃப்ரோஸன் (Frozen) கதையில் வரும் அன்னா என்ற சுட்டிப் பெண்ணும் சேர்ந்து தான் 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தை கற்றுத் தரப்போகிறது. இந்த இரண்டு அனிமெஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான் விளையாட்டுகளோடு கதைகளையும் சேர்த்தே சொல்கின்றன. அதோடு வினாடி வினா நிகழ்ச்சியும் கூட நடத்துகின்றன.

6 பில்லியன் டாலர்கள்

6 பில்லியன் டாலர்கள்

சம்பா மற்றும் அன்னா கதாபாத்திரமும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளதால் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பாடத்திட்டத்தின் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள் என்று பூரிப்படைகிறார் ரவீந்திரன். இதன் காரணமாகவே சமீபத்தில் இந்நிறுவனத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுத் தந்துள்ளது. இன்றைய தேதியில் பைஜூ செயலியின் மதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் (6 பில்லியன் டாலர்). கடந்த ஏழு வருடத்தில் நம்பவே முடியாக வளர்ச்சியாகும். இதற்கு முக்கிய காரணம் இணையதள கல்வியில் அவர் மேற்கொண்ட முயற்சிதான்.

சக்தி மிக்க நபர்களின் பட்டியல்

சக்தி மிக்க நபர்களின் பட்டியல்

பைஜூ செயலி இணையதளத்தில் ரவீந்திரனுக்கு சுமார் 21 சதவிகித பங்குகளும், இவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சுமார் 33 சதவிகித பங்குகளும் உள்ளன. ஒரு சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியை எட்டி, இன்றைக்கு நாட்டின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டதற்கு இவரின் அசாத்திய திறமை மட்டுமே காரணமாக சொல்லிவிடமுடியாது. எந்த செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்பதற்கு பைஜூ ரவீந்திரன் நல்ல உதாரணம். இவருடைய ஈடுபாட்டுடன் கூடிய எளிமையான கற்பித்தல் முறைதான் அனைத்து மாணவர்களுக்கும் பைஜூ செயலி பிடித்துபோனதற்கு காரணமாகும்.

மார்க் ஜூக்கர்பெர்க் நிதியுதவி

மார்க் ஜூக்கர்பெர்க் நிதியுதவி

பைஜூ செயலி கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கடந்த 2016ஆம் ஆண்டில் தன்னுடைய அறக்கட்டளையின் சார்பாக சுமார் 332 கோடி ரூபாய் நிதியுதவு அளித்துள்ளார். வரும் காலத்தில் இது நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று உணர்ந்தே நிதியுதவி அளித்திருக்கிறார். எந்த முயற்சி எடுத்தாலும் அதை இந்தியாவில் இருந்தே தொடங்கவேண்டும் என்று ஸூக்கர்பெர்க் உறுதியாக நம்பியதால் தான் நிதியுதவியை பைஜூவிற்கு அளித்துள்ளார். மேலும் ஸூக்கர்பெர்க்கின் பவுண்டேசன் மூலம் நிதியுதவி பெறும் முதல் ஆசிய நிறுவனமும் பைஜூ தான்.

ஓப்போ ஓரம்போ

ஓப்போ ஓரம்போ

ஆரம்பத்தில் பைஜூ ஆன்லைனில் பாடம் நடத்துவதை பார்த்து கிண்டலடித்த அந்தப் பகுதி மக்கள், இன்றைக்கு இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 பேர்களின் பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளதைப் பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனர். அவரின் இன்றைய வளர்ச்சிக்கு சின்னதொரு சாம்பிள். இந்திய கிரிக்கெட் அணியினர் அணியும் ஜெர்சிக்கு பைஜூதான் விளம்பரதாரர். பைஜூவுடன் போட்டியிட்டு தோற்று ஓடிய ஓப்போ சத்தம் போடாமல் ஒதுங்கிக் கொண்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தற்போது பைஜூ செயலி நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து வரும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பள்ளிப்பாடத் திட்டத்திற்கு ஏற்ற வகையில் பைஜூ செயலி சேவையை வழங்கவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Byju’s Raveendran-India’s Latest Billionaire

A new breed of self-made entrepreneurs is joining the ranks of the well-heeled, helping the country’s ultra-rich population grow at the world’s fastest pace.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more