சோளம் விதைக்கையிலே.. இறக்குமதி அதிகமாயிருச்சு மக்கா.. சிக்கன் சாப்பிடுவது கூடியதால்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஒரு புறம், அதிகளவில் சைவ உணவு உண்பவர்கள் இந்தியாவில் அதிகம் இருக்கின்றனர் என்பது போய் தற்போது, அதிகளவு அசைவ உணவு மக்கள் விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசைவ உணவில் முக்கிய உணவாக கருதப்படும் சிக்கன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அதோடு இந்தக் கோழிகளை வளர்க்க கோழிக்கு உணவாக கொடுக்கப்படும் கார்ன் என்கிற மக்காச்சோளமும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதிகளவு கொள்முதல் செய்யப்படலாம்!
 

அதிகளவு கொள்முதல் செய்யப்படலாம்!

மக்காச்சோளம் கோழிகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுவதால், அதிகளவில் மக்காச் சோளத்தை இறக்குமதி செய்ய, இது வழி வகை செய்கிறது என்றும், மேலும் ஆசியாவிலேயே அதிகளவு கொள்முதலாளரான இந்தியாவில், நவம்பர் மாதம் தொடங்கி 1 மில்லியன் டன்கள் வரைக்கும் வாங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மியான்மர் & உக்ரைனில் இருந்து இறக்குமதி

மியான்மர் & உக்ரைனில் இருந்து இறக்குமதி

இந்தியாவின் சிறந்த கோழி உற்பத்தியாளரான சுகுணா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கொள்முதல் பொது மேலாளர் ஜெய்சன் ஜான் அதிகளவிலான கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிலும் பெரும்பாலான பொருட்கள் மியான்மர் மற்றும் உக்ரைனில் இருந்து வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அசைவம் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது

அசைவம் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது

மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள் தொகை, வருமானத்தில் செலவழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் மக்களின் உணவு பழக்கவழக்கமும் மாறி வாருகிறது. அதிலும் அசைவ உணவுக்கு மாறி வரும் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதாகவும் இந்திய தீவன உற்பத்தியாளர்களின் சங்கமான CLFMA கூறியுள்ளது.

கோழி தேவையும் அதிகரிப்பு!
 

கோழி தேவையும் அதிகரிப்பு!

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் தனி நபர் வருமானம் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாம். இந்த நிலையில் கோழியின் தேவையும் சுமார் 5 சதவிகிதம் உயர்ந்து 5.1 மில்லியன் டன்களாக அதிகரிக்கலாம் என்றும் அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளதாம்.

இறக்குமதிக்கான மற்றொரு காரணம் உற்பத்தியே!

இறக்குமதிக்கான மற்றொரு காரணம் உற்பத்தியே!

இந்த இறக்குமதி அதிகரிப்புக்கான மற்றொரு காரணம் உற்பத்தியே.. ஆமாங்க.. இந்தியாவின் கார்ன் உற்பத்தியே காரணமாம். கடந்த ஆண்டு, மக்காசோளம் அதிகளவு உற்பத்தி செய்யும் முக்கிய உற்பத்தி மாநிலங்களில், சரியான மழையின்மை காரணமாக உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இந்த உற்பத்தி குறைவும் அதிகளவிலான இறக்குமதிக்கு வழி வகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

உற்பத்தியை விட தேவை அதிகம்

உற்பத்தியை விட தேவை அதிகம்

இந்த நிலையில் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் உற்பத்தி 18 - 19 மில்லியன் டன்னாக இருக்க கூடும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதே நேரம் தேவை 20 மில்லியன் டன்னாக இருக்கிறது என்றும் CLFMA கூறியுள்ளது. எனினும் அரசாங்கம் சொந்த உற்பத்தி 27.8 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

ஏற்றுமதியும் குறையும்

ஏற்றுமதியும் குறையும்

இந்தியா, கடந்த ஆண்டு வரை நிகர ஏற்றுமதியாளராக இருந்த நிலையில், இந்த பருவத்தில் வெறும் 5,00,000 டன் மட்டுமே விற்க வாய்ப்புள்ளதாம். இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டு ஏற்றுமதி 1.1 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், இது இந்த வருடம் மழையின்மை காரணமாக உற்பத்தி பாதிப்பால், இது மிக பாதிப்படையும் என்றும் USDA கூறியுள்ளது.

மூத்த ஆய்வாளர்கள் அறிக்கை!

மூத்த ஆய்வாளர்கள் அறிக்கை!

எதிர்காலத்தில் இந்தியா குறைந்த மக்காசோளத்தை மட்டுமே ஏற்றுமதி செய்யும் என்று நான் நினைக்கிறேன் என்று, சிங்கப்பூரின் ரபோபங்கின் மூத்த தானிய ஆய்வாளர் ஆஸ்கார் தக்ரா மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளாராம். உள்நாட்டு சோள உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், தேவையை விட குறைவாக உள்ளது, இதனால், இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறக்கூடும் என்றும் தக்ரா கூறியுள்ளாராம்.

உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு

உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு

உள் நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உள்ளூர் சோளம் விலைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆமாங்க.. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 52 சதவிகிதம் விலையேற்றம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More Indians are eating non veg food, so import more corn for chicken feed than ever before.

More Indians are eating non veg food, so import more corn for chicken feed than ever before.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more