ஜூன் 2019-ல் வெறும் 0.2% வளர்ந்த இந்தியாவின் எட்டு முக்கிய துறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி, இந்தியா: இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயரற்கை எரிவாயு, சுத்தீகரிப்புப் பொருட்கள், உரங்கள், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் போன்ற துறைகளின் வளர்ச்சி ஜூன் 2019-ல் வெறும் 0.2 சதவிகிதமாகத் தான் இருக்கிறது.

இந்த எட்டு முக்கிய துறைகள் தான் இந்தியப் பொருளாதாரத்தில் 40.27 சதவிகிதத்தை பிரதிபலிக்கும் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 2018-ல் இந்த எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2019-ல் வெறும் 0.2% வளர்ந்த இந்தியாவின் எட்டு முக்கிய துறைகள்..!

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் -3.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது ஜூன் 2019-ல் -6.8 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 11.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் 3.2 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.

அதே போல இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் -2.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் -2.1 சதவிகிதமாக மேலும் சரிந்து இருக்கிறது. இந்தியாவின் சுத்தீகரிப்பு பொருட்கள் உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 12.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் -9.3 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.

இந்தியாவின் உரங்கள் உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 1.0 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் 1.5 சதவிகிதமாக தேறி இருக்கிறது. இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 4.2 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் 6.9 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 14.2 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் -1.5 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. இந்தியாவின் மின்சார உற்பத்தி கடந்த ஜூன் 2018-ல் 8.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஜூன் 2019-ல் 7.3 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் ஏற்கனவே மேலே சொன்னது போல ஜூன் 2018-ல் 7.8 சதவிகிதமாக இருந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி தற்போது ஜூன் 2019-ல் வெறும் 0.2 சதவிகிதமாக சரிந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: growth வளர்ச்சி
English summary

eight core sectors growth for June 2019 is 0.2 only

eight core sectors growth for June 2019 is 0.2 only
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X