15 நிமிட ஹெலிகாப்டர் பயணம்! 7000 பேருக்கு விருந்து! தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்புரா, ஃபரீதாபாத், ஹரியானா: குதே ராம் (Kude Ram) தான் இந்த வித்தியாச மனிதர். காலையில் வேலைக்கு போகும் போது சைக்கிளில் போனவர், மாலை வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது ஹெலிகாப்டரில் வந்திருக்கிறார்.

 

7,000 பேருக்கு விருந்து போட்டிருக்கிறார். சரி, நம் குதே ராம் (Kude Ram) என்ன பெரிய அரசியல் தலைவரா..? வியாபாரியா..? அரசாங்க அதிகாரியா..? எதுவுமே இல்லை. ஒரு அரசுப் பள்ளியில் உதவியாளராக (பியூன்) பணியாற்றியவர்.

பணியாற்றியவர் என்றால்... ஆமாங்க. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தான் நம் குதே ராம் (Kude Ram) ஓய்வு பெற்றார். பிறகு இவருக்கு ஏன் ஹெலிகாப்டர்..? வாங்க விரிவாக பார்ப்போம்.

வேலை

வேலை

நம் குதே ராம் (Kude Ram)சத்புரா கிராமத்தில் வாழ்பவர். இவர் நீம்கா என்கிற ஊரில் இருக்கும் அரசு பள்ளிக் கூடத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவருடைய கிராமத்தில் இருந்து, நீம்கா அரசு பள்ளிக்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த 3 கிலோமீட்டர் தூரத்தை தினமும் தன் சைக்கிளில் தான் போவதும், வருவதுமாக இருந்தார் நம் குதே ராம் (Kude Ram). ஆனால் ஓய்வு பெறும் கடைசி நாள் மட்டும் ஒரு ஹெலிகாப்டரில் தன் ஊருக்கு வந்திறங்கி அதிரடி காட்டி இருக்கிறார்.

கனவு

கனவு

40 ஆண்டுகளாக ஹெலிகாப்டரில் பயணப் பட வேண்டும் என்கிற கனவு, நம் குதே ராம் (Kude Ram)-க்கு கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தான் கை கூடியது. ஆச்சர்யத்துடன் ஹெலிகாப்டரின் ரோட்டர்களைப் பார்த்து பெரு மூச்சு விடுகிறார். அப்படியே மெல்ல, ஹெலிகாப்டரின் காக்பிட்டில் விமானிக்கு அருகில் அமர்கிறார். குதே ராம் (Kude Ram)-ன் மனைவி, மூன்று மகள்களில் ஒருவரும், குதே ராம் (Kude Ram)-ன் பேரக் குழந்தையும் ஹெலிகாப்டர் விமானத்தின் பின் புறத்தில் அமர்கிறார்கள். ஹெலிகாப்டர் பறக்கிறது. அந்த 15 நிமிட சுகானுபவத்தை மெய் மறந்து ரசிக்கிறார் நம் குதே ராம் (Kude Ram).

விளையாட்டு பிள்ளை
 

விளையாட்டு பிள்ளை

நம் குதே ராம் (Kude Ram)-க்கு சிறு வயதில் இருந்தே ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருந்ததாம். இவரும் பலரிடம் பல முறை சொல்லி இருக்கிறார். இந்த வயசுல என்னங்க விளையாட்டு இது என அறிவுரைகள் தான் மிஞ்சியது. அதோடு யாரும் நம் குதே ராம் (Kude Ram)-ஐ சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நம் குதே ராம் (Kude Ram) விட்டதாகத் தெரியவில்லை. தன் விமான கனவைக் குறித்து ஜோசியர்களிடம் எல்லாம் கலந்து பேசி இருக்கிறார் என்றால் நம் குதே ராம் (Kude Ram)-ன் லட்சியத்தை என்ன சொல்லி மெச்சுவது எனத் தெரியவில்லை.

பிடிவாதம்

பிடிவாதம்

எப்போது தன் ஹெலிகாப்டர் கனவைப் பற்றிச் சொன்னாலும், கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டிருந்த நேரம் அது. கடந்த மார்ச் 2019-ல் தன் ஓய்வு காலத்திலாவது தன் ஹெலிகாப்டர் கனவை நிறைவேற்றிக் கொள்ள, சத்பூர் கிராம தலைவராக (சர்பஞ்ச்) இருக்கும் தன் சகோதரரிடம் மிக மிக சீரியஸாக, மிகப் பிடிவாதமாக விவரத்தைச் சொல்லி ஏற்பாடு செய்ய வைத்தாராம். குதே ராம் (Kude Ram)-ன் ஓய்வு காலம் தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் கிராமத்துக்கும் பெரிய நினைவாக இருக்க வேண்டும் எனப் பேசி ஒருவழியாக ஓகே வாங்கி இருக்கிறார்.

வரலாறு

வரலாறு

"எனக்கு பெருசா படிப்பு எல்லாம் கிடையாதுங்க. அதனாலேயே வாழ்க்கையில பெருசா எதையும் சாதிக்க முடியல. ஆனால் நம்ம ஏரியாவுல ஒரு வரலாறு படைக்கணும்னு தோனிச்சு. பல வருஷம் கடுமையா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் அரசாங்க வேலையில் இருக்கோம். நம்ம வேலை முடிஞ்சு ஓய்வு காலத்துல எதையாவது பெருசா பண்ணி, இந்த ஊர்ல வரலாறு படைக்கலாம்னு முடிவு பண்ணேன்" என்கிறார் நம் குதே ராம் (Kude Ram). அந்த ஐடியாவின் வெளிப்பாடும், தன் ஹெலிகாப்டர் கனவையும் ஒன்றாகச் சேர்த்து சத்புராவையே திருவிழா கோலமாக்கி இருக்கிறார் நம் குதே ராம் (Kude Ram).

விருந்து

விருந்து

இவரின் ஓய்வு காலத்தைக் கொண்டாடும் விதத்தில் 3.25 லட்சம் ரூபாய் செலவழித்து புக் செய்த 15 நிமிட ஹெலிகாப்டர் பிரயாணம்+ 3.5 லட்சம் ரூபாய் செலவில் சுமார் 7,000 பேருக்கு விருந்து என ஊரையே திருவிழா கோலமாக்கி கொண்டாடி இருக்கிறார். "நம்மூர்காரன் ஒருத்தன், ஹெலிகாப்டர்ல போய் இருக்கான், அதோட ஒரு தூள் விருந்து வேற போட்டிருக்காய்ன்" என ஊர் மக்கள் சுமார் 150 நிமிடம் தூக்கி வைத்து கொண்டாடித் தீர்த்துவிட்டார்களாம். நம் குதே ராம் நினைத்தது போல இப்போது சுத்துப்பட்டு கிராமங்களில் எல்லாம் இவர் தான் வைரலாகிக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

kude ram peon spent 3.25 lakh for 15 minutes helicopter ride and 3.5 lakh for dinner to 7000 guest

kude ram peon spent 3.25 lakh for 15 minutes helicopter ride and 3.5 lakh for dinner to 7000 guest
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X