Reliance Jio-வை பின்னுக்கு தள்ளிய Airtel! ஜியோவ முழுசா தூக்க இன்னும் பல திட்டங்கள இறக்க போறோமுங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில வாரங்களுக்கு முன்பு தான் Airtel நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுக்கு வந்தது Reliance Jio.

அதோடு Reliance Jio நிறுவனம் தன் சேவையைத் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளிலேயே இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை அசால்டக பிடித்தது.

இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பிழைப்பு சிக்கலானதற்கு மிக முக்கிய காரணம் Reliance Jio என்றால் அது மிகை ஆகாது.

Reliance Jio வருகை
 

Reliance Jio வருகை

கடந்த செப்டம்பர் 2016-ம் ஆண்டில் Reliance Jio இந்திய சந்தைக்கு வந்த போது, வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கில், கொண்டு வந்த மலிவு விலை டெலிகாம் திட்டங்களால்... Airtel,வொடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் பிழைப்பில் மண் விழுந்தது. குறிப்பாக இலவச வாய்ஸ் கால்களால் பிரச்னை இன்னும் பெரிதானது. Reliance Jio என்கிற ஒற்றை நிறுவனத்தைச் சமாளிக்க வொடபோன் மற்றும் ஐடியா செல்லூலர் இணைந்தது. வழக்கம் போல ஏர்டெல் தனித்துப் போட்டி இட்டது. அதன் விளைவுகள் இன்று பெரிய அளவில் மாறுபட்டிருக்கிறது.

என்ன ஆகும்

என்ன ஆகும்

வொடபோன் ஐடியா நிறுவனம் ஒரு பெரிய டெலிகாம் நிறுவனம் என்கிற அந்தஸ்தில் இருந்து ஒரு சாதாரன பிராந்திய டெலிகாம் ஆபரேட்டர் ஆகிவிடுமோ என அனலிஸ்டுகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஜூன் 2019 காலாண்டு முடிவுகள் சொன்ன நட்டங்கள், குறைந்திருக்கும் வருவாய் என அனைத்தையும் காரணமாகக் காட்டுகிறார்கள். வொடாபோன் ஐடியா ஜூன் 2019 காலாண்டில் 4,873 கோடி ரூபாய் நிகர நட்டத்தோடு வருவாயும் 4.3% குறைந்திருப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் Airtel கதை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்கிறார்கள் டெலிகாம் அனலிஸ்டுகள்.

Airtel

Airtel

Airtel நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அழகாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதோடு தன் வருவாயையும் (Revenue) நிலையாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. Airtel தன் ஜூன் 2019 காலாண்டு முடிவுகளில் 2,866 கோடி ரூபாய் நிகர நட்டம் காட்டி இருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவு. ஆனால் இந்த நிகர நட்டம் வந்த காரணம், ஒரு முறை மட்டுமே ஏற்படும் சில பிசினஸ் செலவீனங்களால் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு Airtel நிறுவனத்தின் வருவாய் கடந்த ஜூன் 2018-க் காட்டிலும் 4.1% அதிகரித்திருப்பதையும், வாடிக்கையாளர்கள் Airtel-ஐ விட்டு வெளியேறுவது குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள்

முன் வந்த Airtel
 

முன் வந்த Airtel

Airtel இந்த முறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை குறி வைக்காமல், இந்திய டெலிகாம் சந்தை சிந்தனைக்கு மாறாக, தரமான வாடிக்கையாளர்கள் என புதிய ரூட் எடுத்திருக்கிறது.

1. தன் வாடிக்கையாளர்களை 4ஜி தொழில்நுட்பத்துக்கு அழைத்து வருவது,

2. டேட்டா பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வது,

3. வரும் மார்ச் 2020-க்குள் தன் 3ஜி சேவையை இழுத்து மூடுவது...

என பல அதிரடி பிசினஸ் வியூகங்களில் இறங்கப் போகிறதாம். ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலாண்டில், Airtel வாடிக்கையாளர்களின் சராசரி டேட்டா பயன்பாடு 11.9 ஜிபியாக முதல் இடத்தில் இருக்கிறதாம். இதே கால கட்டத்தில் Reliance Jio வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாடு 11.4 ஜிபியாக இருக்கிறதாம்.

வருவாய்

வருவாய்

டேட்டாவில் Airtel நிறுவனம், Reliance Jio-வை ஜெயித்துவிட்டால் எல்லா விஷயத்திலும் Airtel முன்னேறுகிறது எனச் சொல்ல முடியுமா என்ன..? இல்லை தான். ஆனால் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வரும் வருவாயிலும் (ARPU - Average Revenue Per User) Airtel தான் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக இருக்கிறதே..? Airtel நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 129 ரூபாயை வருவாயாகப் பெறுகிறார்கள். ஆனால் Reliance Jio ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 122 ரூபாய் தான் பெறுகிறது. வொடாபோன் ஐடியா யாருக்கும் போட்டி இல்லாமல் 109 ரூபாய் மட்டுமே ஈட்டுகிறது. Airtel-க்கு இது பெரிய விஷயம் தானே..? என அனலிஸ்டுகள் நமக்கு ஆதாரம் கொடுக்கிறார்கள். அதோடு தங்கள் வருவாயை அதிகரிப்பதில் ஏர்டெல் குறியாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

Airtel மொழி

Airtel மொழி

"எங்களுக்கு பணம் கொடுக்காத வாடிக்கையாளர்களை நாங்கள் இழப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என Airtel நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் சொல்லி இருக்கிறார். கடந்த நவம்பர் காலகட்டத்தில் தான் Airtel நிறுவனம் ஒரு குறைந்தபட்சம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதனால் சில வாடிக்கையாளர்கள் Airtel நிறுவனத்தை விட்டு வெளியேறியது உண்மை தான். ஆனால் இந்த ஒரு திட்டத்தால் தான், Airtel நிறுவனத்தால் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் Airtel நிறுவனத்தினர்கள்.

லாய்லடி ப்ரோகிராம்

லாய்லடி ப்ரோகிராம்

Airtel நிறுவனம், மேலும் தங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, கடந்த மே 2019-ல் தான் Thanks Airtel என்கிற பெயரில் சில லாயல்டி ப்ரோகிராம்களைக் கொண்டு வந்தார்கள். இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்யும் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்ப சில நன்மைகள் கிடைக்குமாம். இந்த திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் மாற்றி அமைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். ஆக Airtel

1. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகரிக்கச் செய்வது மற்றும்

2. தன் வாடிக்கையாளர்களை கூடுதல் டிஜிட்டல் சேவைகளைப் பெறச் செய்வது

என்கிற இரு பெரும் குறிக்கோளோடும், அந்த குறிக் கோள்களை நிறைவேற்ற தகுந்த திட்டத்தோடும் இறங்கி இருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இனி இந்தியாவின் இரு பெரும் நிறுவனங்களான Airtel-ம் Reliance Jio-வும் தங்கள் லாபத்தை அதிகரிக்கச் செய்ய, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் திட்டங்களின் விலையை ஏற்றாமல் இருந்தால் சரி. இது வரை Airtel-ன் இந்த திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜியோ எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை அல்லது போட்டியாக எந்த ஒரு திட்டத்தின் விலையயும் குறைக்கவில்லை. அடுத்து வரும் மாதங்களில் "சபாஷ் சரியான போட்டி" என்கிற ரீதியில், இரண்டு நிறுவனங்களும் இந்திய டெலிகாம் சந்தையில் இறங்கி விளையாடும் என எதிர்பார்க்கலம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel Reliance Jio telecom battle may see next stage

Airtel Reliance Jio telecom battle may see next stage
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X