சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம், தென் இந்தியாவின் புகழ்பெற்ற Saravana Bhavan ஹோட்டலுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Saravana Bhavan உணவகத்தில் உணவு சாப்பிட்டு, Food Poisoning பிரச்னையால் உடல் உபாதைகளுக்கு ஆளான டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி உத்தரவிட்டு இருக்கிறது.
Saravana Bhavan மீது தில்லாக தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடுத்தவர் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் எஸ் கே சாமி என்பது கவனிக்கத்தக்கது.

என்ன நடந்தது
எஸ் கே சாமி என்பவர், கடந்த அக்டோபர் 10, 2014 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள Saravana Bhavan உணவகத்துக்குச் சென்று உணவு ஆர்டர் செய்து இருக்கிறார். அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் தலை முடி இருந்திருக்கிறது. அதை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த உணவு பரிமாறுபவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். பணியாளர்களும் எஸ் கே சாமிக்கான உணவை மாற்றிக் கொடுக்கிறார்கள். நம் எஸ் கே சாமியும் புதிதாகக் கொடுத்த உணவைச் சாப்பிட்டு விடுகிறார்.

வாந்தி குமட்டல்
உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து வயிற்றில் என்னமோ ஆகி இருக்கிறது. திடீரென குமட்டல் அதிகரிக்கிறது. குமட்டலும் வாந்தியுமாக வந்திருக்கிறது. நம் உடல் நலக்குறைவுக்கு ஆளாகிறார். அடுத்த நாள் நம் எஸ் கே சாமி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அரசு மருத்துவர்கள் எஸ் கே சாமி சாப்பிட்ட உணவு சரியில்லை. Food Poisoning ஆகி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

காரணம் அவர்கள் தான்
அதன் பின் தகுந்த ஆதாரங்களைத் தயார் செய்து கொண்டு, நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் முறையாகப் புகார் கொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் எஸ் கே சாமி. அவர் தொடுத்த வழக்கில் "Saravana Bhavan உணவகம் தான் எனக்கு மோசமான உணவைக் கொடுத்து, என் உடல் நலக் குறைவுக்கும், மன உளைச்சலுக்கும் காரணம்" எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதொடு தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் 1.1 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்குமாறும் வழக்கு தொடுக்கிறார்.

எதிர் தரப்பு விளக்கம்
Saravana Bhavan தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், எஸ் கே சாமி Saravana Bhavan உணவகத்தில் சாப்பிட்ட அக்டோபர் 10, 2014 தேதியில் சாப்பிட்ட யாரும் இப்படிப் புகார் கொடுக்கவில்லை. 2014-ல் நடந்த சம்பவத்துக்கு சில ஆண்டுகள் கழித்து வழக்கு தொடுத்திருக்கிறார்கள். வேண்டும் என்றே Saravana Bhavan உணவகத்திடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டார்கள். மேலும் எஸ் கே சாமியின் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தள்ளுபடி செய்ததையும் Saravana Bhavan தரப்பு வாதங்களாக முன் வைத்தார்கள்.

தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்டிருக்கிறது. Saravana Bhavan வாதத்தில், எஸ் கே சாமியின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தள்ளுபடி செய்ததற்கான காரணம், Saravana Bhavan மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது தானே ஒழிய, நஷ்ட ஈடு கேட்டதற்காக அல்ல என்பதையும் மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. அதோடு Saravana Bhavan நிறுவனம் வழக்கு தொடுத்த எஸ் கே சாமி, தன் வழக்கில் கோரிய படியே 1.1 லட்சம் ரூபாயை மன உளைச்சலுக்காகவும், வழக்கு செலவுக்காகவும் வழங்க வேண்டும் எனத் தீர்பளித்திருக்கிறது.