ஆடி மாசம்தான்.. ஆனாலும் டல்லடிக்கும் டெக்ஸ்வேலி.. பெரும் கவலையில் வியாபாரிகள்.. உதவி செய்யுமா அரசு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈரோடு : ஈரோடு என்றாலே முதலில் நியாபகம் வருவது மஞ்சள் தான். எனினும் இங்கு ஜவுளி வர்த்தமும் இங்கு முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், ஈரோடு அருகே சேலம் - கோயமுத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தான் இந்த டெக்ஸ் வேலி (Tex valley).

ஆமாங்க.. மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் சுமார் ரூ.500 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து, அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும், மிகப்பெரிய துறையாக ஜவுளித்தொழில் விளங்குகிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில், ஜவுளித் துறையின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

உற்பத்தியை சந்தைபடுத்த வாய்ப்பு
 

உற்பத்தியை சந்தைபடுத்த வாய்ப்பு

இந்த நிலையில் ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மட்டும், சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. ஆண்டுக்கு 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் இதை சந்தைப்படுத்த போதுமான சந்தை வாய்ப்பு இல்லாததால்,உற்பத்தி செய்யும் ஆடை ரகங்களை சந்தைப்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஏற்கனவே தாங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை, அசோகபுரம், கனி மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட் ஆகிய இடங்களில், வாரச்சந்தை அமைத்து, வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் சந்தைப்படுத்தி வந்தனர்.

ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் டெக்ஸ் வேலி

ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் டெக்ஸ் வேலி

இந்த நிலையில், உள்நாட்டு கைத்தறி மற்றும் ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகமும், விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த விசைத்தறி பெருங்குழும திட்டத்தை அமல்படுத்த 2009ல் இத்திட்டம் வகுக்கப்பட்டது. அதிலும் இத்திட்டம் தமிழகத்தில் விசைத்தறி தொழில் மையமாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிச் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை அமைக்க ஈரோடு யு.ஆர்.சி., புரமோட்டர்ஸ், லோட்டஸ் ஏஜன்சியுடன் இணைந்து அமைக்கப்பட்டது.

ஜவுளிக்கடல்

ஜவுளிக்கடல்

இதையடுத்து ஈரோடு அருகேயுள்ள கங்காபுரத்தில், 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அரசு அனுமதியுடன், 2014ல், டெக்ஸ்வேலி என்ற ஜவுளிச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில் 40 கோடி ரூபாய் நிதி உதவியும், மாநில அரசின் சார்பில் பத்திர பதிவுக்கான கட்டண சலுகையும் அளிக்கப்பட்டது.

மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளது
 

மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளது

இங்கு ஒருங்கிணைந்த விசைத்தறி ஜவுளி வர்த்தக சந்தை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வாரச்சந்தை, தினசரி சந்தை, கண்காட்சி அரங்கு என மொத்தம் 3 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த சந்தை வளாகத்தின் முன்பகுதியில் 4 லட்சம் சதுரடியில் 4 தளங்களுடன் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே 11.5 லட்சம் சதுரடியில், 6 தளங்களுடன் தினசரி சந்தையும் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லா வசதிகளும் உண்டு

எல்லா வசதிகளும் உண்டு

இந்த ஜவுளிச் சந்தையில், வர்த்தகர்கள் வசதிக்காக வங்கி கிளைகள், ஏ.டி.எம்.,மையம், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கு கடை வைத்துள்ள மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் கடை வைத்துள்ளனர். இங்கு மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரம் செய்து கொள்ளலாம். சில்லறை வியாபாரிகள் என அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு கடையின் வாடகை எவ்வளவு தெரியுமா?

ஒரு கடையின் வாடகை எவ்வளவு தெரியுமா?

இங்கு முதல் மாடியில் உள்ள ஒரு கடைக்கு மாத வாடகை 6000 ரூபாய் எனவும், இரண்டாவது மாடியில் உள்ள கடைகளுக்கு 3500 ரூபாய் வாடைகை எனவும் கூறப்படுகிற்து. அதிலும் புதிதாக தனது வர்த்தகத்தை முறையாக தொடங்குகிறார்கள் எனில் அதற்கு தனியாக சலுகைகள் உண்டு. இதற்கு முதலில் வாரச்சந்தையாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இந்த சந்தை, தற்போது தினசரி சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு கிட்டதட்ட 1500 கடைகள் உள்ளன. ஆனால் இதில் 750 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

கடை தனியாக ஆரம்பித்தால் பல செலவுகள்

கடை தனியாக ஆரம்பித்தால் பல செலவுகள்

ஒரு கடையின் உரிமையாளர் என்பவர், வெளியில் ஒரு கடையை ஆரம்பித்தால், அவருக்கு விளம்பரம், வாடகை, தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் தனித் தனியாக கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த டெக்ஸ் வேலியை பொறுத்த வரை இங்கு கடையை ஆரம்பிக்கும் ஒரு சில்லறை வியாபாரி மாதம் 6000 ரூபாய் மட்டும் செலுத்தினால் மட்டும் போதும். மற்ற செலவுகளை நிர்வாகமே பார்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள், அதிலும் குறிப்பாக ஊழியர்கள் இங்கு வந்து செல்ல நிர்வாகமே போக்குவரத்து வசதிக்காக வேன் களை அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார்கள் இந்த ஜவுளி சந்தையின் முக்கிய அதிகாரிகள்.

கூட்டம் அவ்வளவாக இல்லை

கூட்டம் அவ்வளவாக இல்லை

இவ்வகையான சலுகைகள் கொடுத்திருந்தாலும், இந்த ஜவுளி சந்தையில் கூட்டம் என்பது அவ்வளவாக இல்லை. இதே ஈரோடு கனி மார்கெட் பகுதியில் கூட்டம் நிற்க இடம் இல்லாமல் இருக்கும் நிலையில், கடைகளும் அங்கு குறைவாகவே இருக்கிறது. ஆனால் அங்கு இருக்கும் கூட்டம் இங்கு இருப்பதில்லை என்று கூறுகிறார்கள் இங்குள்ள சில்லறை வியாபாரிகள். ஏனெனில் இந்த ஜவுளி சாம்ராஜ்யம் சேலம் - கோயமுத்தூர் நெடுஞ்சாலையில் காங்காபுரம் என்ற ஊரில் உள்ளது.

போக்கு வரத்து வசதி வேண்டும்

போக்கு வரத்து வசதி வேண்டும்

இங்கு மக்கள் வந்து செல்ல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை. 500 கோடி ரூபாய் முதலீடு செய்து இவ்வளவு பெரிய மாலுக்கு, நெடுஞ்சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள். எனினும் இதுவரை உள்ளூர் மக்கள் அதிகம் இங்கு வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. மற்றபடி இது ஒரு அருமையான வாய்ப்பு என்றும் கூறுகிறார்கள்.

மாத வருமானம்

மாத வருமானம்

இங்கு கடை வைத்துள்ளோருக்கு மாதம் சராசரியாக 50,000 வரை வருமானம் கிடைக்கிறது. சில மாதங்களில் ஒன்றுமே இருக்காது. இதே சீசன் காலங்களில் 1 லட்சம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறுகிறார்கள் இங்குள்ள சில்லறை வியாபாரிகள். எனினும் இவ்வளவு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இந்த ஜவுளி சந்தைக்கும், ஈரோடு பேருந்து நிலையத்திற்கும் அடிக்கடி பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: textile
English summary

Sales plummet in wholesale Textile market

Sales plummet in wholesale Textile market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more