கஷ்மீரில் ரூ.1000 கோடி முதலீடு செய்யத் தயார்.. தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை தீராமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் மோடி அரசு வழக்கம் போல் அவசர அவசரமாகக் காஷ்மீர்-க்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது.

இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட உள்ளது.

மக்கள் போராட்டம்
 

மக்கள் போராட்டம்

இதனிடையில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்குப் பரபரப்பான சூழ்நிலையில் உருவாகி மக்கள் பீதியிலிருந்தனர். ஆனால் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் தற்போது வந்துள்ளதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

இப்படிப் பிரச்சனை ஒருபக்கம் இருக்கும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காஷ்மீரில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இவரின் அறிவிப்பு வர்த்தகச் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிந்தர குப்தா

ராஜிந்தர குப்தா

லூதியானா தலைமையிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் டிரைடென்ட் குரூப் நிறுவனத்தின் தலைவரான ராஜிந்தர குப்தா காஷ்மீரில் தான் 1000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய புதிய வர்த்தகம் துவங்கத் தயாராக இருப்பதாகப் பிரபல செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

மக்கள்
 

மக்கள்

இந்த வீடியோ காட்சி தற்போது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்குக் கூடத் திரும்பாத நிலையில், காசு பணமென்று பேசுவது எல்லாம் தப்பு எனக் குறைகூறி வருகின்றனர். மறுபுறம், 370 நீக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பலர் ராஜிந்தர குப்தா-வின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.

சிறு, குறு தொழில்

சிறு, குறு தொழில்

இதுகுறித்து ராஜிந்தரக் குப்தா கூறுகையில், தற்போதைய நிலையில் காஷ்மீரில் பெரிய அளவிலான வர்த்தகம் எல்லாம் எதுவும் செய்ய முடியாது, ஆனால் சிறு, குறு தொழில் பிரிவுகளில் பல வகையான வர்த்தகத்தைப் பாகிஸ்தானில் துவங்கலாம். இதேபோல் விருந்தோம்பல் துறையில் அதிக வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் ராஜிந்தரத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: business investment
English summary

Trident group announces to invest Rs 1,000 crore in JK

The Ludhiana-based business giant Trident group has announced to invest ₹1,000 crore in Jammu and Kashmir, just two days after the Centre revoked the special status of the state by scrapping Article 370. Group chairman Rajinder Gupta on Wednesday night shared his plan to invest in J&K with a news channel and later shared the video clipping of the same on his social media accounts, including Facebook.
Story first published: Monday, August 12, 2019, 15:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?