நாங்கள் இந்தியாவைச் வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற்றுவோம்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவை தொழில் புரிய சிறந்த இடமாகக் மாற்றுவதில் சிறந்த இடமாகக் மாற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என்றும் பிரதமர் மோடி Economictimes பத்திரிக்கைக்கு கொடுத்த தனித்துவமான பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் இது குறித்து பேசியவற்றை இந்தக் கட்டுரையில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சர்வதேச அளவில் இந்தியாவை சிறந்த தொழில் புரியும் நகரமாக மாற்றுவோம் என்றும், மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பலவற்றை பற்றி இந்த பேட்டியின் போது விவரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா உலக அளவில் உயர்ந்திருக்கிறது
 

இந்தியா உலக அளவில் உயர்ந்திருக்கிறது

பொதுவாக பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மையை குறித்து சர்வதேச கருத்தரங்குகளில் பேசும்போது, அனைத்து நாடுகளின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்புகிறது. இந்த அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவின் நிலை மேம்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையும் காட்டுகிறது.

உலகளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

உலகளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் அதன் பலன் களையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தற்போது மீண்டும் எங்களது ஆட்சி தொடரும் நிலையில், இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது அதன்படி, அரசு தீவிரமாகவும், மிக விரைவாகவும் செயலாற்றி வருகிறது.

பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்த முடிவுகள்

பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்த முடிவுகள்

மேலும் இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில் சூழலை மேம்படுத்துவதற்காக அறிவார்ந்த திறமையுள்ள நிபுனர்கள் உடன் குழு அமைத்து, ஒவ்வொரு முடிவும், அவர்களுடன் இணைந்து செயல்படும் என்றும் , இவ்வாறு எடுக்கப்படும், ஒவ்வொரு முடிவும் இந்தியாவை தொழில் தொடங்க சிறந்த நாடாக அமைக்கும் விதத்தில் தான் முடிவெடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்திய அமெரிக்கா உறவு எப்படி இருக்கிறது?
 

இந்திய அமெரிக்கா உறவு எப்படி இருக்கிறது?

அமெரிக்கா இந்தியா பற்றிய உறவுகளைப் பற்றிய கேட்டபோது, இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு அமைப்புகளைப் கொண்ட நாடுகளாகும். மேலும் இந்தியா வெவ்வேறு நிலைகளை கொண்ட உள்நாட்டு சந்தைகளை கொண்ட நாடாகும். மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவும் அமெரிக்காவும், ஆக்கப்பூர்வமான பல உரையாடல்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் கடந்த சில மாதங்களாகவே வர்த்தகம் மற்றும் காமர்ஸ் துறையில் நேர்மறையான கருத்துடன் இருக்கிறோம். இது இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வெற்றியை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

ஏற்றுமதியைப் பற்றி?

ஏற்றுமதியைப் பற்றி?

இந்தியாவை பொறுத்த வரை மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்த ஏற்றுமதி திட்டங்கள் ஒருங்கிணைகப்பட்டுள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி எங்கள் வளர்ச்சியின் பகுதியாகும். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் சில பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது தான், அவை இந்தியாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விவசாயின் ஏற்றுமதிஅடுத்த 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக வேண்டும் என்றும், விவாசாயிகளை நாங்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் நினைக்கவில்லை. அவர்கள் ஏற்றுமதியாளர்களாகத் தான் நினைக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பட்ஜெட் பற்றி பேசுகையில் 70,000 கோடி ரூபாய் மூலதனத்தை பொதுத் துறை வங்கிகளுக்கு நிதி அளிக்க திட்டமிட்டுள்ளது. இது கடன் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், சொத்து பணமாக்குதல் மற்றும் சொத்து மறு சுழற்சி மற்றும் முதலீடுகள் குறித்து தொடர்ச்சியான கவனம் செலுத்தப்பட்டும் வருகிறது. பொது மூலதன செலவு அதிகரிப்பும், இந்த நடவடிக்கை விரைவில் தனியார் முதலீட்டையும் அதிகரிக்கும்.

இதை பற்றி?

இதை பற்றி?

இத்துறைகளில் பற்றிய பேசியபோது, ஆட்டோமொபைல் துறைகளில் விரைவில் வளர்சி காணும் என்றும் கூறியுள்ளார். சுரங்கத் தொழிலை பொறுத்த வரை, முந்தைய ஆட்சிகளின் மோசடிகளைக் களைந்து, தற்போது ஒதுக்கீடுகள் தூய்மைப்படுத்தலுடன் நடந்து வருகின்றன. மேலும் நாங்கள் இந்த சுரங்கங்கள் குறித்த வெளிப்படையான ஒதுக்கீடு குறித்த அறிக்கைகளை அளித்துள்ளோம். இந்த அறிக்கை இயற்கையை நிலைப்படுத்தும், அதற்காக சிறிது காலத்தையும் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளோம். உண்மையில் பல முன்னனி தொழிலதிபர்கள் அங்கு முதலீடு செய்ய மிகுந்த ஆவலோடு உள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம், ஹெல்த்கேர் மற்றும் சில முதலீடுகள் குறித்து ஊக்குவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும்

போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும்

மேலும் இங்கு போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலம், குறிப்பாக புதிய போக்குவரத்து பாதைகள், மற்றும் ரயில்கள் மற்றும் மாடர்னைஷேஷன் செய்யப்பட்ட விமான தளங்கள் என அதிகளவில் ஊக்குவிக்கப்படும் போது, இந்த மாநிலம் மற்ற மாநிலங்களோடு இணைக்கப்படும், சிறந்த போக்குவரத்து வசதியினால், இங்குள்ள பொருட்கள் மற்ற பகுதிகளுக்கு ஈசியாக எடுத்து செல்ல முடியும் என்றும், இதை உலகம் பூராவும் செல்லவும் வசதியாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi says India a better place to do business

Modi says India a better place to do business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?