Infosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வருமானம் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி இருக்கிறதாம். இதனால் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூன்றாவது பெரிய ஐடி ஏற்றுமதி சந்தையாகி இருக்கிறது ஆஸ்திரேலியா.

 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 85 சதவிகித வருவாய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து தான் வருகிறதாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலில் பரேக்கும் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறார்.

Infosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 11.8 பில்லியன் அமெரிக்க டாலராம். அதில் 61.65 சதவிகித வருவாய் அமெரிக்காவில் இருந்தும், 23.6 சதவிகித வருவாய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் வருகிறதாம்.

கடந்த ஆண்டு காலத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் சுமார் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனச் சொல்லி இருந்தது இன்ஃபோசிஸ். அதோடு டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் இன்னொவேட்டர் கூட்டாளியாக ஆஸ்திரேலிய ஓப்பனிலும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பலரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த வெற்றியை பாராட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், எவரெஸ்ட் குழும ஐடி ஆலோசனை நிறுமத்தின் பீட்டர் பெண்டர் (Peter Bendor)மட்டும் ஆஸ்திரேலியா அத்தனை பெரிய ஐடி சந்தை கிடையாது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு அனைத்து ஐடி நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஒரு தேக்க நிலையை ஆஸ்திரேலிய ஐடி சந்தைகளில் கண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் ஆஸ்திரேலிய ஐடி சந்தையின் அளவு மற்றும் அது இயங்கும் விதம் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இத்தனை பெரிய வளர்ச்சியை சாத்தியமாக்கி இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.

நீண்ட காலமாகவே ஆஸ்திரேலிய ஐடி துறை அவுட் சோர்ஸிங் வேலைகளைக் கொடுக்கும் சந்தையாகவே இருந்தது. அதோடு வெளி நிறுவனங்களுக்கு தன் ஐடி வேலைகளைக் கொடுத்து முடித்துக் கொள்ளும் சந்தையாகவும் இருந்ததாம். ஆகையால் தான் நிறுவனங்கள் அதிவேகமாக பில்லியன் டாலருக்கு வியாபாரம் செய்ய முடிந்ததாகச் சொல்லி இருக்கிறார் பீட்டர். அதோடு கூடிய விரைவில் ஆஸ்திரேலியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறையத் தொடங்கும் எனவும் சொல்லி இருக்கிறார் பீட்டர்.

 

இன்ஃபோசிஸ் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), டேட்டா பகுப்பாய்வு (Data analytics) போன்ற டிஜிட்டல் டெக்னாலஜிகளில் பல புதிய கண்டு பிடிப்புகளை செய்து கொண்டே இருக்கிறார்களாம். பெங்களூருக்குப் பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனம், வியாபார சோதனைகளுக்கான தன் 5ஜி ஆய்வுக் கூடத்தை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்திகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

infosys earned 1 billion dollar from Australian it market

infosys earned 1 billion dollar from Australian it market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X