ரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்-க்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை.

 

சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் என பல வழிகள் அவரை நமக்குத் தெரியும்.

அவ்வளவு ஏன் நம் இந்தியாவின் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கூட புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் என பல அணிகளுக்கு விளையாடி இருக்கிறார்.

முதலீடு

முதலீடு

எந்தத் துறையில் பணியாற்றினாலும் சைட் பிஸ்னஸ் இருப்பது நல்லது என்பதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீல் ஸ்மித் நிரூபித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போலவே பிற நாட்டுக் கிரிக்கெட் வீரர்களும் பிஸ்னஸ் செய்வதிலும், முதலீடு செய்வதிலும் ஆர்வமாக உள்ளனர். இதில் முக்கியமானவர் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் 2015 ஜூலை மாதத்தில் சுமார் 1 லட்ச ஆஸ்திரேலியா டாலர் ஆதாவது 48 லட்சம் ரூபாயை koala என்னும் மெத்தை தயாரிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

koala நிறுவனம்

koala நிறுவனம்

முதலீட்டுக்கு நிகராக, அதே நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைப் பெற்றார். இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிட்டராகவும் ஆனார். வெறும் 4 வருட காலத்தில் இந்நிறுவனம் சுமார் 2 லட்ச மெத்தைகளை விற்பனை செய்து விற்பனையில் கலக்கி வருகிறது koala நிறுவனம். இன்றைய மதிப்பின்படி இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 150 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது.

டேம்பரிங் பிரச்சனை
 

டேம்பரிங் பிரச்சனை

2018-ம் ஆண்டில் பந்தை டேம்பரிங் (Ball Tampering) செய்த காரணத்திற்காக ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட காலத்தில் இவரது பங்குகளின் மதிப்பு சுமாராக 27 மில்லியன் டாலர் வரை சரிந்தது. தற்போது இந்த பால் டேம்பரிங் பிரச்சனை தீர்ந்துவிட்ட நிலையில் ஜூலை மாதத்தில் ஸ்டீவ் ஸ்மித் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 31 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.

வாழ்நாள் வருமானம்

வாழ்நாள் வருமானம்

இந்தத் தொகை ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் விளையாடி இது நாள் வரையில் சம்பாதித்த தொகையை விடவும், தன் முதலீட்டு மூலம் கிடைத்திருக்கும் தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டில் பந்தை டேம்பரிங் பிரச்சனைக்குப் பின் 2019 உலகக் கோப்பையில் தான் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். தற்போது இவர் இங்கிலாந்தில் நடைபெறும் Ashes போட்டியில் விளையாடி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smith invested ₹48L in startup in 2015, his stake now worth ₹60 cr

Former Australia captain Steve Smith had invested AU$100,000 (₹48 lakh) in a mattress startup Koala in 2015. With its most recent valuation, Smith's stake in the startup is now estimated at AU$12.18 million (around ₹60 crore). As per the Australian Financial Review, Smith has earned more from his Koala investment than from cricket altogether. Smith is also Koala's brand ambassador.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X