கண்ணீரில் அனில் அம்பானி..! ரூ. 1,000 கோடி கடனால் நிறுவனம் திவால்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒரு பக்கம் அண்ணன் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.

 

ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார். இப்போது அனில் அம்பானிக்கு இன்னொரு பலத்த அடி விழுந்திருக்கிறது.

திவால்

திவால்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் (Reliance Marine and Offshore Limited) நிறுவனம் தற்போது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அலஹாபாத் கிளை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் ஆன பிறகு இப்போது அனில் அம்பானியின் இரண்டாவது நிறுவனமாக ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் திவாலாகி இருக்கிறது.

2017-ல் விண்ணப்பம்

2017-ல் விண்ணப்பம்

ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம், அனில் அம்பான்னியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. ரிலையன்ஸ் நவால் அண்ட் இன்ஜினியரிங் என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம் வாங்கிய கடன்களைக் கொடுக்கவில்லை என டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐஎஃப்சிஐ என்கிற நிறுவனம் தான் கடந்த நவம்பர் 2017-ல் வழக்கு தொடுத்தது.

150 கோடி ரூபாய்
 

150 கோடி ரூபாய்

ஐஎஃப்சிஐ நிறுவனம் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறதாம். இந்த கடன் தொகையைக் கொடுக்காததால் வழக்கு தொடுத்து திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார் ஐஎஃப்சிஐ நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி எஸ் வி ராவ். வழக்கு நடந்து கொண்டிருக்கும் காரணத்தால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் பிரச்னை குறித்து மேற்கொண்டு எந்த விஷயத்தையும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை ஐஎஃப்சிஐ நிறுவன தரப்பு.

மொத்தம் 1000 கோடி

மொத்தம் 1000 கோடி

அனில் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்த ஐஎஃப்சிஐ நிறுவனத்தையும் சேர்த்து சுமார் 1,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். அதில் ஐஎஃப்சிஐ நிறுவனம் தான் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து சிக்கலில் சிக்கி இருக்கிறார்களாம். இப்போது தான் அனில் அம்பானி, தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் பிரச்னையில் இருந்து கொஞ்சம் விலகி நிம்மதியாக இருந்தார். யார் கண் பட்டதோ, அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani Insolvent: anil ambani led company reliance marine is under insolvency and bankruptcy code

Anil Ambani Insolvent: anil ambani led company reliance marine is under insolvency and bankruptcy code
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X