தீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும், நுகர்வோர் நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்கு எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் தயாராகி வருகிறது.

 

பொதுவாகப் பண்டிகை, திருவிழா வந்தாலே வர்த்தகம் சூடு பிடித்துவிடும், இதை நம்பி பல வியாபாரிகள் கடனை வாங்கியாவது சரக்குப் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்வார்கள். இப்படி இருக்கையில் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவில் செலவு செய்ய உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

தீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..!

அடுத்து வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக இந்தியப் பண்டிகைகள் ஒவ்வொன்றாக வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா முழுக்க கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, தசரா (நம் ஊரில் நவராத்திரி திருவிழாக்கள்), தீபாவளி என வருடத்தின் மிகப்பெரிய பண்டிகைகள் தொடர்ந்து வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் நுகர்வோர்கள் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என விளம்பரத்தில் அதிக அளவில் செலவு செய்வார்கள். இந்த வகையில் இந்த வருடம் டிவி தொடங்கி பிரின்ட், ரேடியோ, டிஜிட்டல் மீடியா போன்ற விளம்பர தளங்களில் கடந்த வருடத்தை விடவும் 10 முதல் 20 சதவீதம் கூடுதல் தொகை அதாவது கிட்டத்தட்ட 20000 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

இந்த வருடத்தின் முதல் 6 மாத காலத்தில் ஐபிஎல், உலகக் கோப்பை, பொதுத் தேர்தல் ஆகிய காரணங்களால் அதிகளவிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்யப்பட்டது. 2வது பாதிப் பண்டிகைக்காகப் பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.

இதன் மூலம் 2019ஆம் ஆண்டு மட்டும் சுமார் 69,000 கோடி ரூபாய் அளவிலான தொகை விளம்பரத்திற்காகச் செலவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்பு விளம்பரத்திற்காக அதிகச் செலவு செய்யும் பிரிவுகளில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் அதிகளவிலான தொகையைச் செலவு செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இவர்களைத் தொடர்ந்து நுகர்வோர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், நகை கடை நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: radio
English summary

indian brands plan a ₹20,000-crore for advertisment for festive season

The festive season is expected to contribute more than 25% of overall advertising media spends in 2019. The spends include marketing and advertising promotions on festive offers and discounts across television, print, outdoor, radio, and digital media platforms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X