ஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 10,000 ரூபாய் வைத்து திருபாய் அம்பானி துவங்கிய ரிலையன்ஸ் இன்று 100 பில்லியன் டாலர் அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது. இதில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்கு இடையில் சொத்துக்கள் பிரிந்தாலும் இவருவரின் வளர்ச்சியும் முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.

 

இதில் முகேஷ் அம்பானியின் சொத்து ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு..

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு..

உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் முலம் முகேஷ் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்புத் தற்போது 50 பில்லியன் டாலர் என்ற மாபெரும் உச்சத்தை அடைந்துள்ளது.

இதன் மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உயர்ந்துள்ளார் முகேஷ் அம்பானி.

450 பில்லியன் டாலர்

450 பில்லியன் டாலர்

ஆசியாவிலேயே பணக்கார 20 குடும்பங்கள் சுமார் 450 பில்லியன் டாலர் வரையிலான சொத்தை கட்டி ஆள்கிறது. இந்த முக்கியமான பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கும், 2வது இடத்தில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Kwokக்கும் சுமார் 12 பில்லியன் டாலர் வித்தியாசம்.

வித்தியாசம்
 

வித்தியாசம்

பொதுவாக டாப் 10 அல்லது டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் பணக்காரர்கள் மத்தியில் 1, 2 அதிகப்படியாக 5 பில்லியன் டாலர் வித்தியாசம் தான் இருக்கும்.

ஆனால் எங்கும் இல்லாத வகையில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கும், 2வது இடத்தில் இருக்கும் Kwokக்கும் சுமார் 12 பில்லியன் டாலர் வித்தியாசம் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இந்தியா சீனா இரு நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் மந்தமான சூழ்நிலையிலேயே உள்ளது.

ஆனால் அம்பானியின் பல்வேறு மாஸ்டர் பிளான்களால் இவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. நாடும் பொருளாதாரமும் எப்படி இருந்தாலும் அவருடைய வளர்ச்சியிஸ் எப்போதும் தடையிருக்காது, இதுதான் அம்பானி கணக்கு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambani family $12 billion richer than Asia's 2nd wealthiest family

The Ambani family has topped Bloomberg's list of 'Asia's 20 Richest Families' with a fortune of $50.4 billion. Hong Kong's Kwok family, whose Sun Hung Kai Properties is the city's largest developer, came in second with a wealth of $38 billion. Others in the list include Shapoorji Pallonji Group's Mistry family, the Hindujas and Samsung's Lee family.
Story first published: Saturday, August 24, 2019, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X