இனி ஏசி ரயில் கட்டணம் குறையும்.. இந்திய ரயில்வே அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரயில்வே துறையில் நிலவும் மந்த நிலையை போக்கவும், வருவாயை அதிகரிக்கவும் ரயில்வே துறை அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்த நிலையில் ஏசி நாற்காலி ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

 

குறிப்பாக சதாப்தி, கதிமான், தேஜஸ் மற்றும் பிற ரயில்களில் உள்ள ஏசி நாற்காலி ரயில்ளுக்கான டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இனி  ஏசி ரயில் கட்டணம் குறையும்.. இந்திய ரயில்வே அதிரடி!

இந்த நடவடிக்கையானது இருக்கை வசதியை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த கட்டண போக்குவரத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் அடிப்படை கட்டணத்தில் 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றாலும், முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் GST தனித்தனியாக விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ரயில்வே துறை.

ஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை..! நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..?

இது முந்தைய ஆண்டில் மாதாந்திர ரயில்களில் பாதியளவு மட்டும் பயணிகள் பயணித்த ரயிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், முந்தைய ஆண்டில் பாதியளவுக்கும் கீழ் பயணித்த ரயில்களில், மக்கள் இந்த தள்ளுபடிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனுடன் சேர்த்து ரயில்களுக்கு கேட்டரிங் தேர்வு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிக்கையில், அனைத்து மண்டல ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களிடம் தள்ளுபடி கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க, கட்டணத்தில் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இந்த திட்டமானது, ஆக்கிரமிப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் சென்னை சென்ட்ரல் முதல் - மைசூரு வரையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ், அஹமதாபாத் - மும்பை வரையிலான மத்திய சதாப்தி ரயில், ஜல்பைகுரி - ஹவுரா சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களிலும் தற்போதுள்ள தள்ளுபடி திட்டம் அப்படியே இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறப்பட்டுள்ளது. எப்படியோ மக்களுக்கு உபயோகப்படும் படியாக இருந்தால் நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways announced 25% discount on some train tickets, but Reservation fee, superfast charge, GST, as applicable will be separate for this.

Railways announced 25% discount on some train tickets, but Reservation fee, superfast charge, GST, as applicable will be separate for this.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X