முகேஷ் அம்பானியின் அதிரடித் திட்டம்..! ரூ. 1,500-க்கு க்ளவுட் சேவைகளா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா, மேற்கு வங்கம்: ஜியோ என்கிற ஒரு நிறுவனம் கடந்த செப்டம்பர் 2016-ல் தொடங்கப்பட்டு, இந்திய டெலிகாம் வியாபாரத்தையே புரட்டிப் போட்டது.

அதன் பின் தான் ஒரு சாக்லேட் விலையில் ஒரு ஜிபி டேட்டா இந்திய மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியது. இன்னும் ஜியோவின் இந்த டெலிகாம் விலைப் போர் முடிந்த பாடாகத் தெரியவில்லை.

ஆனால் அதற்குள் இன்னொரு இடத்தைக் குறி வைத்து மீண்டும் வேறு ஒரு விஷயத்தில் விலைப் போரைக் கொண்டு வரப் போகிறது ரிலையன்ஸ். அது தான் க்ளவுட் சேவைகள்..!

எங்கு

எங்கு

ஆம் ரிலையன்ஸ் ஜியோ இப்போது களம் இறங்கி இருக்கும் துறை க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன். இந்தியாவில் இருக்கும் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் உடன் கனெக்டிவிட்டி சேவைகளையும் மாதம் 1,500 ரூபாய்க்கு வழங்கப் போவதாக நம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சொல்லி இருக்கிறார். தற்போது இந்தியாவில் இந்த சேவையை சுமாராக மாதம் 15,000 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் மற்ற நிறுவனங்கள்.

பரவும்

பரவும்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ எப்படி செல்ஃபோன் சேவையில் களம் இறங்கி டேட்டா விலையை குறைக்கச் செய்ததோ. அதே போல இப்போது ரிலையன்ஸ் ஜியோ க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையில் களம் இறங்கி இருக்கிறது. இதனால் ஏகப்பட்ட சிறு குறு தொழில் முனைவோர்கள் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என பெருமையாகச் சொல்லி இருக்கிறது பேங்க் ஆஃப் அமேரிக்கா மேரில் லின்ச்.

எஸ் எம் இ

எஸ் எம் இ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை இவ்வளவு விலைக் குறைவாக கொடுப்பதால் இது நாள் வரை க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்தாத தொழில் முனைவோர்கள் கூட ஜியோ நிறுவனத்தின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் எனச் சொல்லி இருக்கிறது தரகு நிறுவனமான க்ரெடிட் சூசி.

மாறுவது சிரமம்

மாறுவது சிரமம்

அதோடு ஏற்கனவே க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோவின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும் என்றும் முன் கூட்டியே சொல்லி எச்சரித்து இருக்கிறது க்ரெடிட் சூசி என்கிற தரகு நிறுவனம்.

டேட்டா சென்டர்

டேட்டா சென்டர்

இந்தியாவில் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளோடு வீடியோ மற்றும் டேட்டா பிரைவஸி சேவைகளும் இன்று தேவையான ஒன்றாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இந்தியாவில் டேட்டா சேமிப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய டேட்டா சென்டர் வியாபாரங்கள் தலை எடுக்கத் தொடங்கி இருக்கின்றன. இதனால் டேட்டா சென்டர் வியாபாரம் பெரிய அளவில் மேம்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

மற்ற சேவைகள்

மற்ற சேவைகள்

இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் கை கொடுத்து அவர்களை விரைவில் டிஜிட்டலுக்கு மாற்றி, உலக அளவில் போட்டி போட வைக்கும் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதோடு அனைத்து சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு எண்டர்பிரைஸ் தரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகள், வீடியோ கான்ஃபிரென்சிங் சேவைகள், பாதுகாப்புத் தீர்வுகள், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை சார்ந்த தீர்வுகள் என பல வசதிகளையும் கொடுக்கப் போகிறார்களாம். மேலே சொன்ன அனைத்து சேவைகளையும் இந்தியாவின் முக்கிய மொழிகளிலும் கொண்டு வரப் போவதாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அம்பானி.

மின்சாரம்

மின்சாரம்

ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா சென்டர் வியாபாரம் இந்தியாவில் தலை எடுக்கத் தொடங்கினால், அந்த டேட்டா சென்டர்களுக்குத் தேவையான மின்சாரம் கொடுக்க மட்டும் சுமாராக ஒரு ஆண்டுக்கு 700 - 800 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என தன் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது பேங்க் ஆஃப் அமெரிக்க மேரில் லின்ச். ஆக ரிலையன்ஸ் ஜியோ வந்த போது எப்படி ஏர்டெல், வொடாஃபோன், ஐடியா என பலரும் தெறித்து ஓடினார்களோ... இப்போது அப்படி டேட்டா சென்டர் மற்றும் க்ளவுட் கம்ப்யூடிங் துறையில் வியாபாரம் செய்பவர்கள் தெறித்து ஓடப் போகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio: cloud solution with connectivity to sme for rs 1500 per month

Reliance Jio: cloud solution with connectivity to sme for rs 1500 per month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X