1000 ரூபாய் நோட்டுகளாக 1.17 கோடி ரூபாய்..! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் தமிழகத்தைச் சேர்ந்த ரமணம் என்கிற வியாபாரி மதுரையைச் சேர்ந்தவர். இவர் நவம்பர் 2016 காலங்களில் டீமானிட்சைசேஷனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

 

இவர் கடந்த 30 டிசம்பர் 2016 அன்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் திருப்பூர் கிளையில் தன்னுடைய 1.17 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய முயற்சித்து இருக்கிறார்.

தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கியின் திருப்பூர் கிளை அதிகாரிகளோ ரமணன் வைத்திருந்த 1.17 கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.

காசோலை பிரச்னை

காசோலை பிரச்னை

ஏகப்பட்ட சக வியாபாரிகள், பொருள் கொடுத்தவர்கள், கடன் கொடுத்தவர்களுக்கு என பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும். ஆகையினால் பணத்தை வாங்கிக் கொள்ளச் சொல்லிக் கேட்டு இருக்கிறார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் வாங்கிக் கொள்ளவில்லை. அப்போதே வங்கி உயர் அதிகாரிகள் தொடங்கி, ஆர்பிஐ வரை பலருக்கும் கடிதம் எழுதி, பணத்தை டெபாசிட் செய்ய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார்.

ஆர்பிஐ பதில்

ஆர்பிஐ பதில்

கடந்த மாதம் நம் தமிழக வியாபாரி கே ரமணணுக்கு மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பதில் கடிதம் வந்து இருக்கிறது. மன்னிக்கவும் ரமணன் சார் நீங்கள் உங்கள் 1.17 கோடி ரூபாய் பணத்தை இனி எந்த வங்கிகளிலும் டெபாசிட் செய்ய முடியாது. பழைய பணத்துக்கு புதுப் பணத்தை மாற்றிக் கொடுக்க முடியாது, என பணிவாக பதில் சொல்லி இருக்கிறார்கள். 100, 200 என்றால் பரவாயில்லை. அப்படியே விட்டு விடலாம். ஆனால் 1.17 கோடி ரூபாய் ஆயிற்றே...? எப்படி விடுவது..?

கால அவகாசம்
 

கால அவகாசம்

நவம்பர் 08, 2016 அன்று மாலை நம் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருக்கும் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது எனச் சொல்லி அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்தார். அதன் பின் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும் எனச் சொன்னார். ஆனால் டிசம்பர் 30, வரை தான் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சரி ரமணன் விஷயத்துக்கு வருவோம்.

வழக்கு

வழக்கு

இப்போது வழக்கு உச்ச நீதிமன்றம் வரைச் சென்று இருக்கிறது. என் வியாபாரம் சம்பந்தமாக பலருக்கு பல செக்குகளைக் கொடுத்து இருந்தேன். அதற்கு எல்லாம் வங்கியில் பணம் இருந்தால் தானே செக் வழியாக சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதனால் தான் பணம் போடப் போனேன். இப்போது என் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல், ஏகப்பட்ட செக் மோசடி வழக்குகள் என் மீது இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

உச்ச நீதிமன்றமோ நம் தமிழக வியாபாரியான கே ரமணன் மற்றும் அவருக்கு எதிரான வாதங்களை கேட்டு இருக்கிறது. ரமணன் தரப்போ தன் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களைத் தர உச்ச நீதிமன்றம் வழி செய்ய வேண்டும் என்கிறது. உச்ச நீதிமன்றமோ இப்போது அரசுக்கு இந்த விஷயம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: demonetization currency
English summary

Demonetization: business man has 1.17 crore old note want to change it through supreme court order

Demonetization: business man has 1.17 crore old note want to change it through supreme court order
Story first published: Saturday, August 31, 2019, 18:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X