இது எங்கே போய் முடியும்.. ஆட்டோமொபைல் துறையில் தொடரும் வீழ்ச்சி.. இன்னும் எத்துணை வேலையிழப்புகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பல லட்சம் வேலைகளை ஏற்கனவே காவு வாங்கிய ஆட்டோமொபைல் துறையில், தற்போது நீடித்து வரும் தொடர் வீழ்ச்சியால் இன்னும் எத்துணை வேலையிழப்புகள் இருக்குமோ என்ற கவலையில் ஊழியர்களை ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பல ஆயிரம் ஷோரூம்கள் மூடப்பட்டும் வரும் நிலையில், இன்னும் இந்த வீழ்ச்சியானது நின்ற பாடில்லை. இதனால் இன்னும் எத்துணை வேலை வாய்ப்புகள் பறிபோகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் கூட மாருதி சுசூகி மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளன.

பழிவாங்கும் அரசியல் வேண்டாம்..பொருளாதாரத்தை மேம்படுத்த சிந்தனையுடன் செயல்படுங்கள்.. மன்மோகன் அதிரடி

மாருதி சுசூகி விற்பனை வீழ்ச்சி
 

மாருதி சுசூகி விற்பனை வீழ்ச்சி

குறிப்பாக மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் 32.7 சதவிகித விற்பனை சரிவைக் கண்டு, 1,06413 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ஏற்றுமதியும் 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதேகாலத்தில் 1,58,189 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாக மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

இதே உள்நாட்டு விற்பனையும் 34.3 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டு 97,061 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018ல் 1,47,700 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சிறிய ரக கார்களான ஆல்டோ மற்றும் வேகன்ஆர் 10,123 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 35,895 யூனிட்கள் விற்பனையாகி இருந்ததும், இதோடு ஒப்பிடும் போது நடப்பாண்டில் 71.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் வீழ்ச்சி

தொடர் வீழ்ச்சி

இதே காம்பாக்ட் பிரிவில் விற்பனை கிட்டதட்ட 24 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, குறிப்பாக ஸ்விப்ட், செலிரியோ, பலீனோ, டிசைர், இக்னிஸ் உள்ளிட்ட கார்கள் (Swift, Celerio, Ignis, Baleno and Dzire) 54,274 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 71,364 யூனிட்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவே நடுத்தர ரக கார்களான செடன் சியாஸ் ரக கார்கள், வெறும் 1,596 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே முன்னர் 7,002 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சி கண்ட ஏற்றுமதி
 

வீழ்ச்சி கண்ட ஏற்றுமதி

இதே பயன்பாட்டு வாகனங்களான விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ் வாகனங்கள் விற்பனை 3.1 சதவிகிதம் அதிகரித்து, 18,522 யூனிட்களாகவும், இது முன்னர் 17,971 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதே இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 10.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 9,352 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளது, இதே முன்னர் 10,489 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

25% வீழ்ச்சி கண்ட மகேந்திரா

25% வீழ்ச்சி கண்ட மகேந்திரா

இந்திய உற்பத்தி நிறுவனமான மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் தனது விற்பனையில் 25 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 36,085 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் 48,324 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும் கூறியுள்ளது. இதே உள்நாட்டில் விற்பனை 26 சதவிகிதம் குறைந்து, 33,564 வாகனங்களை மட்டும் விற்பனை செய்திருந்ததும், இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018ல் 45,373 வாகனங்களை விற்பனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மகேந்திரா 15% ஏற்றுமதி வீழ்ச்சி

மகேந்திரா 15% ஏற்றுமதி வீழ்ச்சி

இதே காலத்தில் ஏற்றுமதி 15 சதவிகிதம் சரிந்து 2,521 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,951 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகள் வாகன பிரிவில், பயன்படுத்தப்பட்ட வாகன பிரிவில் விற்பனை 13,507 ஆக மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முன்பு 19,758 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 32 சதவிகித வீழ்ச்சியாகும்.

பண்டிகை கால சீசனில் ஆவது விற்பனை அதிகரிக்குமா?

பண்டிகை கால சீசனில் ஆவது விற்பனை அதிகரிக்குமா?

இதே வர்த்தக வாகன பிரிவில் 14,684 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னர் 20,326 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில், பல வித காரணங்களால் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. எனினும் நாங்கள் அடுத்து வரவிருக்கும் பண்டிகை கால சீசனில் ஆவது விற்பனை களைகட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இன்னும் வேலையிழப்பு அதிகரிக்கும்

இன்னும் வேலையிழப்பு அதிகரிக்கும்

என்னதான் அரசு பல விதமான அறிக்கைகளை அறிவித்து வந்தாலும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் இதனால் இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் என்பதோடு, இந்த துறையில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என்றால், மறைமுகமாக 50 பேர் வேலை செய்கிறார்கள், இதனால் இன்னும் வேலையிழப்பு என்பது, இந்த நிலை தொடர்ந்தால் அதிகரிக்கும் என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர்.

தள்ளாடிக் கொண்டிருக்கும் பொருளாதாரம்

தள்ளாடிக் கொண்டிருக்கும் பொருளாதாரம்

அதோடு இத்துறை சார்ந்த மற்ற துறைகளிலும் இதன் எதிரொலி ஏற்கனவே காண துவங்கியுள்ள நிலையில் பிரச்சனை தீவிரமடைய துவங்கியுள்ளது. குறிப்பாக டயர் துறை, ஸ்டீல் துறை, பிளாஸ்டிக் உதிரி பாகங்கள், இருக்கை செய்யும் துறைகள் என அனைத்தும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், BS V1விதிகளும் இன்னும் இத்துறையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதைப் போல, மத்திய அரசு நலிந்து வரும் பொருளாதாரத்தில் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Again and again automobile sectors going to down

Again and again automobile sectors going to down
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X