100 நாள் ஆச்சு.. ஆனா ஒன்னுமே மாறல.. ஆப் கி பார் மோடி சர்கார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகள் மத்தியில் மோடி 2019 பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்தார். முதல் 5 வருட ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், சட்டங்களும் சரியாக இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் பாதையில் ஈட்டுகின்ற நிலையில் 2வது 5 வருட ஆட்சியையும் மோடியில் கிடைத்துள்ளது.

 

இந்த 2வது ஆட்சியின் முதல் 100 நாட்கள் கடந்துவிட்டார் மோடி. இந்த 100 நாட்களில் மோடியும் மோடி அரசும் சந்தித்த மிகப்பெரிய சரிவுகள் எது..?

ஜிடிபி

ஜிடிபி

7 வருடத்தில் இல்லாத அளவிற்கு நாட்டிந் ஜிடிபி அளவு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 2018 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 சதவீதமாக இருந்த நாட்டின் ஜிடிபி அளவு 2019 ஜூன் காலாண்டில் 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. வெறும் ஒரு வருட காலத்தில் 3 சதவீத ஜிடிபி சரிவு இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்துக் காத்திருக்கிறது என்பதை நேரடியாக உணர்த்துகிறது.

இது மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்திலும் நாட்டின் ஜிடிபி மிகவும் மோசமான நிலையை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரத்தைத் திருப்பதி உண்டியலில் போட வேண்டியது தான்.

 காஷ்மீர்

காஷ்மீர்

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை உள்ளது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மோடி அரசு தனக்கு வேண்டியதை எவ்விதமான யோசனையும் இன்றிச் செய்து வருகிறது.

அதில் ஒன்று தான் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மோடி அரசின் இந்த முடிவிற்கு அவர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே கொடிப்படித்து நின்றனர். காஷ்மீர் மக்களும், நாட்டின் பிறபகுதி மக்களுக்கும் இது நிச்சயம் பிடிக்கவில்லை.

கல்வி கொள்கை
 

கல்வி கொள்கை

மோடி அரசு புதிதாகக் கொண்டு வந்த கல்வி கொள்கைக்குக் கல்வி அறிவில் உயர்ந்துள்ள மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் அதைபற்றி மோடி அரசுக்கு எவ்விதமான கவலையும் இல்லை.

ஆகஸ்ட் 23

ஆகஸ்ட் 23

நிர்மலா சீதாராமன் தாக்கல் பட்ஜெட் அறிக்கை நாட்டே பெருமைப்பட வேண்டிய விஷயமாக என்று பேசப்பட்டு வந்த நிலையில், அந்த அறிவிப்பில் பொரும்பாலானவற்றை ஆகஸ்ட் 23ஆம் தேதி திரும்பப் பெற்றார்.

பட்ஜெட் அறிவிப்புகளால் இந்தியாவில் வேலைவாய்ப்பு, வர்த்தகத் துறை, உள்நாட்டு முதலீடு, வெளிநாட்டு முதலீடு, தனியார் நிறுவன முதலீடு என அனைத்தும் பெரிய அளவில் பாதித்தது.

இதன் மூலம் மோடி அரசு எவ்விதமான ஆய்வும், எதிரொலிகளைக் கணக்கிடாமல் அறிவித்துள்ளது எனத் தெளிவாகத் தெரிகிறது.

யூனியன் பட்ஜெட்

யூனியன் பட்ஜெட்

தொழிற்துறை சார்ந்த அறிவிப்புகள் தான் கணிக்காமல் அறிவிக்கப்பட்டு இருந்தது எனத் தெரிந்த நிலையில் நடுத்தர மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் அடைய போதுமான வரிச் சலுகைகள் யூனியன் பட்ஜெட்-இல் அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

இதுல அய்யோ வேற, அம்மா வேற..

ஒரு அறிவிப்பு பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் எந்த அளவிற்குப் பாதிக்கும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் வெளியிட்ட அறிவிப்பை 100 நாட்களுக்குள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் எப்படி இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம். இந்த 100 நாள் மோடி ஆட்சியில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது என்பதைக் கமெண்ட் பாக்ஸ்-இல் பதிவு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi 2.0, 100 days: What India is saying?

Modi 2.0, 100 days: What India is saying India loved Narendra Modi’s first term as prime minister, going by the 2019 election results. How is the country warming up to the initial months of its second-term PM?
Story first published: Sunday, September 1, 2019, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X