மீண்டும் 72 ரூபாயைத் தொட்ட இந்திய ரூபாய் மதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நேற்று மாலை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.40 ரூபாய்க்கு நிறைவு அடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேரத் தொடக்கத்திலேயே 71.97 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது.

 

அத்தனை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய ரூபாய் மதிப்பு தற்போது சுமாராக 72.39 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. சுமாராக ஒரே நாளில் 0.98 ரூபாய் மதிப்பை இழந்து இருக்கிறது. இத்தனை பலமான இழப்புக்கு என்ன காரணம்..? வாருங்கள் பார்ப்போம்.

 மீண்டும் 72 ரூபாயைத் தொட்ட இந்திய ரூபாய் மதிப்பு..!

1. ஜிடிபி

2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டுக்கான இந்தியா ஜிடிபி வளர்ச்சி வெறும் 5 சதவிகிதமாக வந்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று தரவுகளை வெளியிட்டது இந்திய அரசு. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத மோசமான காலாண்டு ஜிடிபி வளர்ச்சி எனத் தெரிய வந்தது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவின் உற்பத்தித் துறையும் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி சரிந்து இருக்கிறது.

2. மார்க்கெட் செண்டிமெண்ட்

ஏற்கனவே இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5% தான் என மத்திய அரசே சொன்னதால் இந்த அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து இருக்கிறது.

3. டாலர் மதிப்பு அதிகரிப்பு

உலக பொருளாதார சூழல்கள் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் இல்லாமல் உலகின் ஆறு முக்கிய கரன்ஸிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு சுமார் 0.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அந்த ஆறு முக்கிய நாடுகளின் கரன்ஸி மதிப்பு சரிந்து இருக்கிறது.

 

4. அமெரிக்க தரவுகள்

நியூ யார்க் நகர பிராந்தியத்தின் ஃபெடரல் வங்கியின் பேச்சு, ஒட்டு மொத்த ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பேச்சு , அமெரிக்க வேலை வாய்ப்பு தொடர்பான தரவுகள் என பல தரவுகளுக்காக காத்திருக்கிறார் கரன்சி வர்த்தகர்கள். கடந்த ஜூலை மாதம் தான் கடந்த 10 ஆண்டுகளிலேயே முதல் முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்தது ஃபெடரல் வங்கி. இன்னொரு முறையும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள் சந்தை வியாபாரிகள்.

5. இந்திய ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 3.5 சதவிகிதம் குறைந்து இருக்கிறது. அதோடு இந்தியாவில் முதலீடு செய்து வைத்திருக்கும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியில் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஆகஸ்டில் பலத்த அடி வாங்கி இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள். இதுவரை இந்தியாவில் இருந்து 2.28 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: currency rupee ரூபாய்
English summary

again Indian rupee touched 72 mark due to global and domestic economic issues

again indian rupee touched 72 mark due to global and domestic economic issues
Story first published: Tuesday, September 3, 2019, 21:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X