விடுமுறைக்காக கலங்கும் ஊழியர்கள்.. அப்படி எதற்கு விடுமுறை.. ஏன் இந்த கலக்கம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து, தனது பயணிகள் வாகனத்தை உற்பத்தி செய்யும் பிளான்டுகளான குருகிராம், ஹரியானவில் உள்ள மானேசர் பிளான்ட் உள்ளிட்ட இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளை, வரும் செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 9ம் தேதிகளில், உற்பத்தியை நிறுத்துவதாகவும், ஸ்டாக் எக்சேஞ்சுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

 

பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்த இரண்டு பிளான்ட்களையும் இரண்டு நாட்களுக்கு மூட உள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆக இந்த இரண்டு நாட்களுக்கு எந்த உற்பத்தியும் கிடையாது என்று அதிரடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்தும் வரும் நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 10-வது மாதமாக பயணிகள் வாகனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க ஏடிஎம் பின் நம்பர சொல்லுங்க..! ரிலையன்ஸ் ஜியோல இருந்து பேசுறோம்..!

மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி குறைப்பு

மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி குறைப்பு

நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தொடர்ந்து ஏழு மாதமாகவும் மொத்த உற்பத்தியை குறைத்துள்ளது. இதனால் இதன் வெளியீடும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை குறைத்துள்ளது கவனிக்கதக்கது. இம்மாதத்தில் அரசு துவண்டு போயுள்ள ஆட்டோமொபைல் துறைக்கு சில சலுகைகளை கொடுத்துள்ள நிலையிலும், இத்துறை சார்ந்த வல்லுனர்கள் இது போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாகன துறையில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வை உடனடியாக அகற்ற அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், மேலும் ஸ்கிராப்பிங்க் கொள்கையை (பழைய வாகனங்களை அகற்றுதல்) தொடங்க வேண்டும் என்றும், அப்போது தான் தொடர்ந்து வீழ்ச்சியை மட்டுமே கண்டு கொண்டிருக்கும் இத்துறையை மீட்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து விற்பனையும் சரிவு
 

தொடர்ந்து விற்பனையும் சரிவு

கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனையும், கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 32.7% விற்பனை சரிவைக் கண்டு, 1,06413 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ஏற்றுமதியும் 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டிலும் இப்படியா?

உள்நாட்டிலும் இப்படியா?

உள்நாட்டு விற்பனையும் 34.3 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டு 97,061 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018ல் 1,47,700 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சிறிய ரக கார்களான ஆல்டோ மற்றும் வேகன்ஆர் 10,123 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 35,895 யூனிட்கள் விற்பனையாகி இருந்ததும், இதோடு ஒப்பிடும் போது நடப்பாண்டில் 71.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இங்கயும் இப்படிதான் விற்பனை

இங்கயும் இப்படிதான் விற்பனை

மேலும் காம்பாக்ட் பிரிவில் விற்பனை கிட்டதட்ட 24% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக ஸ்விப்ட், செலிரியோ, பலீனோ, டிசைர், இக்னிஸ் உள்ளிட்ட கார்கள் (Swift, Celerio, Ignis, Baleno and Dzire) 54,274 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது என்றும், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 71,364 யூனிட்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவே நடுத்தர ரக கார்களான செடன் சியாஸ் ரக கார்கள், வெறும் 1,596 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே முன்னர் 7,002 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டிருந்ததும் கவனிக்கதக்கது.

இருக்கும் வேலையாவது காப்பாற்றுங்கள்

இருக்கும் வேலையாவது காப்பாற்றுங்கள்

ஆக மொத்தம் அனைத்து வாகன விற்பனையும் மாதத்திற்கு மாதம் விற்பனை சரிந்து கொண்டே இருக்கும் நிலையில், ஏற்கனவே பல ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய இந்த நிறுவனம், இனி என்ன செய்ய காத்திருக்கிறதோ?. அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காவிட்டாலும். இருக்கும் வேலை வாய்ப்புகளையாவது காப்பாற்றுமா என்பது தான், தற்போது அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki India said it has decided to shut down 2 manufacturing plants for two days

Maruti Suzuki India said it has decided to shut down 2 manufacturing plants for two days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X