அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில், மேலும் இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 10 லட்சம் ஒப்பந்த ஊழியர்களின் பணி ஆபத்தில் உள்ளது என்றும், இதே நிலை தொடர்ந்தால் வேலையிழப்பு இன்னும் தொடரலாம் என்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மந்த நிலையில் உள்ள ஆட்டொமொபைல் துறையில், சங்கிலி தொடராக விற்பனை சரிவால், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி துறையிலும் பல லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருவதாக அறிவித்துள்ளது.
விற்பனை சரிந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களை வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இது தவிர ஏற்கனவே பல நூறு ஷோரூம்கள் மூடப்பட்ட நிலையில், விற்பனை பிரிவிலும், ஷோரூம்களில் பணிபுரியும் ஊழியர்களிலும் வேலை குறைக்கப்படலாம் என்றும் சியாம் எச்சரித்துள்ளது.
74 ரூபாய் தொடும்.. மோசமான நிலையில் இந்திய ரூபாய்..!

ஏற்கனவே 15,000 பேர் பணி நீக்கம்
சியாம் வருட மாநாட்டில் பேசிய இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா முன்னதாக ஆட்டோமொபைல் துறையில் மிக மோசமான நிலையில் ஏற்கனவே 15,000 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். ஆனால் இதே நிலை தொடருமாயின், இன்னும் 10 லட்சம் வேலை இழப்புகள் இழக்கப்படலாம், ஆக இன்னும் 10ல் லட்சம் பேரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் சியாம் அறிவித்துள்ளது.

மொத்தத்தில் பாதி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆட்டோமொபைல் துறை கிட்டதட்ட பாதி இடம் பெற்றுள்ளது. இதே சரக்கு மற்றும் சேவை வரி 15 சதவிகிதமும், இது தவிர இத்துறையில் 37 மில்லியன் மக்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் சியாம் அறிவித்துள்ளது. ஆக ஆட்டோமொபைல் துறையால் ஒட்டுமொத்த துறையும் சங்கிலி தொடராக பாதிப்படையும் என்றும் சியாம் எச்சரித்துள்ளது.

எதனால் இந்த பாதிப்பு
படு வீழ்ச்சி கண்டுள்ள இத்துறை, அதிகப்படியான ஜி.எஸ்.டி விகிதம் மற்றும் சரியான காலத்தில் சரியான பருவமழையின்மையால் பாதிகப்பட்டுள்ள விவசாய உற்பத்தி, இதனால் ஏற்பட்டுள்ள குறைவான பணப்புழக்கம், பி.எஸ் 6 புதிய விதிமுறைகள் உள்ளிட்ட இன்னும் பல காரணிகளால் இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசு வங்கிக் கடன்களை ஊக்குவித்தாலும், அதிகப்படியான ஜி.எஸ்.டி விகிதத்தால் இது சாத்தியமா என்றும் தெரியவில்லை என்றும் நிபுனர்கள் கூறியுள்ளனர்.

பல லட்சம் பேர் பணி நீக்கம்
ஆட்டோமொபைல் துறையில் சில்லறை விற்பனை துறையில் முன்னதாக 2 லட்சம் வேலை இழப்புகளை சந்தித்துள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், மறைமுகமாகவும் இத்துறையில் இதே அளவு வேலைகள் இழந்திருக்க கூடும் என்றும் சியாம் கூறியுள்ளது. இது தவிர வதேரா தற்போது இருக்கும் 28 சதவிகித ஜி.எஸ்.டி விகிதத்தை 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.