ருச்சி சோயாவின் கடனை செலுத்தும் பதஞ்சலி.. அடுத்து என்ன நடவடிக்கை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : திவால் நடவடிக்கை உட்படுத்தப்பட்ட கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் ருச்சி சோயா நிறுவனத்தை, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கையகப்படுத்த, பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையான 3,483 கோடி ரூபாயை செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும் மும்பையின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், தனது அறிக்கையில், பதஞ்சலியின் 4,350 கோடி ரூபாய் தீர்மானத் திட்டத்திற்கு ஏலதாரர், சில மாற்றங்களுடன் ஒப்புக் கொண்டார் என்றும், செப்டம்பர் 6ம் தேதியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ருச்சி சோயாவின் கடனை செலுத்தும் பதஞ்சலி.. அடுத்து என்ன நடவடிக்கை?

 

இதே ருச்சி சோயா நிறுவனம், பதஞ்சலி குழுமம் செலுத்த வேண்டிய தொகையை, 204.75 கோடி ரூபாயை ஈக்விட்டியாகவும், 3,233.36 கோடி ரூபாய் கடனாகவும் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொகையானது பதஞ்சலி குழுமத்தின், பதஞ்சலி கன்சோர்டியம் ஆஹிகிரஹான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செலுத்தப்படும், பின்னர் ருச்சி சோயாவுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் பல வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ருச்சி சோயா நிறுவனம், தனது தேவைக்காக ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சில ஆயிரம் கோடி கடனை வாங்கியிருந்தது.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நிறுவனம், வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. இந்த நிலையிலேயே கடந்த 2017ல் இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஸ்டார்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் டி.பிஎஸ் பேங்க் ஆகியவை இந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும் படி தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் மனு தாக்கல் செய்தன.

இந்த நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டாலும், இறுதியில் பதஞ்சலியே வென்றது. இந்த நிலையில் தற்போது ருச்சி சோயா நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ள வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகபட்சமாக 1,800 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 816 கோடி ரூபாயும், இதே பஞ்சாப் நேஷனல் வங்கி 743 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய தொகையும் ஸ்டார்டர்ட் சார்டர்ட் வங்கி 608 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய தொகை உள்ளது என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Patanjali settle dues Ruchi Soya to over Rs.3,483 crore in debt

Ruchi soya accepted the bidder prices, also Ruchi soya asked Patanjali group will infuse Rs 204.75 crore as equity and Rs 3,233.36 crore as debt.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X