ஸ்விக்கி பெயரில் மோசடி..! பெண்ணை ஏமாற்றி ரூ. 95,000 பறிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: அபர்னா என்கிற 47 வயது பெண் ஸ்விக்கி கோ (Swiggy Go) அப்ளிகேஷன் வழியாக தன்னுடைய ஸ்மார்ட்ஃபோனை முகம்மது பிலால் என்பவரிடம் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

சில நடைமுறை குளறுபடிகளால் ஸ்விக்கி கோ நிறுவனத்தின் டெலிவரி பாய், அபர்னாவின் ஸ்மார்ட்ஃபோனை முகம்மது பிலாலிடம் டெலிவரி செய்ய முடியவில்லை.

பிறகு என்ன..? வழக்கம் போல அபர்னா ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொள்ள கூகுளில் எண்ணைத் தேடி இருக்கிறார், இங்கு தான் ட்விஸ்டே..!

இந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு!

போலி நபர்கள்
 

போலி நபர்கள்

47 வயதுள்ள அபர்ணா, கூகுளில் ஸ்விக்கி கோவின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் தேடிக் கண்டு பிடித்து இருக்கிறார். எண் கிடைத்ததும் வழக்கம் போல கால் செய்து புகார் அளித்து இருக்கிறார். அபர்னாவின் சூழலையும் வயதையும் புரிந்து கொண்டு ஏமாற்றத் தொடங்குகிறார்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல பேசிக் கொண்டிருந்த திருடர்கள். முதலில் இன்னொரு டெலிவரி ஆர்டர் செய்யச் சொல்லி அதற்கு 3 ரூபாய் மட்டும் கட்டணமாகச் செலுத்தச் சொல்கிறார்.

வங்கி விவரங்கள்

வங்கி விவரங்கள்

அந்த 3 ரூபாய் கட்டணம் செலுத்த ஒரு லிங்கைக் கொடுக்கிறார்கள். அந்த லிங்கில் வழக்கம் போல வங்கிக் கணக்கு எண், பெயர், தொடங்கி யூபிஐ பேமெண்ட் சிஸ்டத்தின் பின் கோட் பாஸ்வேர்ட் வரை எல்லாவற்றையும் கேட்டு இருக்கிறார்கள். விவரம் அறியாத 47 வயது அபர்னா எல்லா வங்கி சார்ந்த குறிப்பாக பணப் பரிமாற்றங்கள் சார்ந்த விவரங்களையும் கொடுத்துவிடுகிறார். இந்த விவரங்களை எல்லாம் வலைதளத்தில் பதிவு செய்த பின் தன் டெலிவரி சேவைக்காக காத்திருக்கிறார் அபர்னா.

நஷ்டம்

நஷ்டம்

ஆனால் எதிர்பாராத விதமாக அபர்னா வங்கிக் கணக்கில் இருந்து 95,000 ரூபாய் டெபிட் செய்துவிட்டதாக எஸ் எம் எஸ் வந்து இருக்கிறது. அதன் பிறகு தான் அபர்னாவுக்கு விஷயம் புரிய வருகிறது. பதற்றத்துடன் மீண்டும் அதே போலி ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் பயன் இல்லை. கிட்ட தட்ட ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம். அதன் பிறகு பெங்களூர் பகுதியின் பையப்பனஹல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

ஸ்விக்கி தரப்பு
 

ஸ்விக்கி தரப்பு

ஸ்விக்கி தரப்பில் இருந்து வந்த அதிகாரிகள் அபர்னாவை ஏமாற்றியது ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் இல்லை என்பதை, முறையான ஆதாரங்களோடு காவல் துறையினருக்கு விளக்கி இருக்கிறார்கள். அதன் பின் அபர்னாவுக்கு தன்னை முழுமையாக ஒரு போலி நபர் ஏமாற்றியது தெரிய வருகிறது. அதோடு ஸ்விக்கி எப்போதும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண், யூபிஐ ஐடி, யூபிஐ பின் போன்ற விவரங்களை கேட்க மாட்டோம். அப்படி யாராவது கேட்டால் வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களை எச்சரித்து இருக்கிறார்கள்.

உஷார் மக்களே

உஷார் மக்களே

எனவே இனி ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசும் போது கால்களை பதிவு செய்து கொள்வது நல்லது. அதோடு யார் உங்களிடம் வந்து வங்கி தொடர்பான விவரங்களைக் கேட்டாலும் தயவு செய்து கொடுக்காதீர்கள். ஒரே ஒரு முறை இந்த வங்கி விவரங்களைப் பகிர்ந்து விட்டால் போதும், நம் வங்கிக் கணக்கில் இருக்கும் ஒட்டு மொத்த பணமும் காலியாகிவிடும். எனவே ஜாக்கிரதையாக இருங்கள் மக்களே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banking fraud: in the name of swiggy girl lost rupees 95000

Online banking fraudsters cheated 95,000 rupees from a girl in the name of swiggy customer care
Story first published: Tuesday, September 10, 2019, 13:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X