30% ஒப்பந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் பி.எஸ்.என்.எல்.. கண்ணீரில் பணியாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம் : கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வருவதும், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் கூறி வந்தது.

 

இந்த நிலையில் தற்போது கேரளாவில் ஒப்பந்த ஊழியர்களில் 30 சதவிகிதம் பேரை வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது.

அதிலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஊழியர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வந்திருப்பது கவனிக்கதக்கது.

ஸ்விக்கி பெயரில் மோசடி..! பெண்ணை ஏமாற்றி ரூ. 95,000 பறிப்பு..!ஸ்விக்கி பெயரில் மோசடி..! பெண்ணை ஏமாற்றி ரூ. 95,000 பறிப்பு..!

செலவினை குறைக்கவே இந்த பணி நீக்கம்

செலவினை குறைக்கவே இந்த பணி நீக்கம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் இது குறித்த சுற்றறிக்கையில், கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம் செலவினை குறைக்க, ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 30 சதவிகிதம் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு ஒப்பந்த ஊழியர்களை குறைப்பதற்கான இந்த முடிவானது, தனிக்கை குழுவின் அவதாணிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளமும் வரவில்லை

சம்பளமும் வரவில்லை

இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளமும் தொடர்ந்து இரண்டாவது மாதமும் தாமதமான நிலையில், ஓணத்திற்கு முன்பு எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பெரிய வெளிப்புற வேலைகளை செய்ய, பெரிய நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் முயற்சியாக, பணியாளர்கள் செலவை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கருதப்படுகிறது.

விரைவில் விருப்ப ஓய்வு திட்டம்
 

விரைவில் விருப்ப ஓய்வு திட்டம்

பி.எஸ்.என்.எல் மறுமலர்ச்சி தொகுப்பின் ஒரு பகுதியாக ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டம் விரைவில் வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிலும் தாமதமான ஊதியங்களின் தற்போதைய நிலை காரணமாக, சில சலுகைகள் பெறுவதை பற்றி நினைக்கலாம். ஆக இது விரைவில் செயல்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக ஓய்வூதிய வயதில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள், 2000க்கும் மேற்பட்டோரிடம் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ள வலியுறுதப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

நிலுவை தொகை எப்போது கிடைக்கும்

நிலுவை தொகை எப்போது கிடைக்கும்

பி.எஸ்.என்.எல் நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும், ஒப்பந்த ஊழியர்களுக்கான நிலுவை தொகை குறித்தும் ஏற்கனவே இது குறித்து சி.ஜி.எம், கார்ப்பரேட் அலுவலகத்துக்கு அவசர நிதியாக கொடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது, ஏனெனில், கேரளா கனத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL officially announced to reduce contract employees by 30% in kerala

BSNL plans to reduce contract employees 30% in kerala. also 2,000 retirement age contract staffs have been asked to leave.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X