தீபாவளிக்குத் தயாராகும் பிளிப்கார்ட்.. 700 நகரங்களில் 27,000 கடைகள் இணைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் இந்தியாவிற்கு வந்த பின் பிளிப்கார்ட் நிறுவனம் பெரிய அளவிலான வளர்ச்சி அடையமுடியவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் இழக்காமல் போராடி காப்பாற்றியுள்ளது. இதற்குக் கிடைத்த வெற்றிதான் வால்மார்ட்.

வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைபற்றிய நிலையில், தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் மாபெரும் தள்ளுபடி விற்பனையான பிக் பில்லியன் டேஸ்-க்குப் பிளிப்கார்ட் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. இந்த அதிரடி தள்ளுபடிக்காக இந்தியா முழுவதும் சுமார் 27000 ரீடைல் கடைகளை இணைந்துள்ளது.

காரணம் இந்த முறை போட்டி பிளிப்கார்ட் அமேசான் இடையில் இல்லை, வால்மார்ட் அமேசானுக்கும் இடையில்.

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
 

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்

இந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க ஷாப்பிங் சேவை மட்டும் சார்ந்து இருக்காமல் பல்வேறு சேவைகளை இணைத்து வருகிறது.

அமேசான் நிறுவனம் கூடத் தற்போது ஆன்லைன் புட் டெலிவரி சேவை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தற்போது தீபாவளி அதிரடி தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகி வருகிறது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

பிளிப்கார்ட் தளத்தில் இருக்கும் 160 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அளிக்க வேண்டும் என்றும், புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்று பிளிப்கார்ட் தொடர்ந்து போராடி வருகிறது.

அதற்காக மக்கள் அதிகம் நாடி வரும் சேவைகளைப் பிளிப்கார்ட் தொடர்ந்து தனது தளத்தில் இணைத்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் அமேசான் ப்ரைம் போலப் பிளிப்கார்ட் தளத்திலும் வீடியோ சேவை துவங்கப்பட்டது.

தீபாவளி அதிரடி தள்ளுபடி

தீபாவளி அதிரடி தள்ளுபடி

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிரடி தீபாவளி தள்ளுபடி விற்பனைக்காகக் கடந்த 6 மாத காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 700 நகரங்களில் சுமார் 27000 ரீடைல் கடைகளை இணைக்கப்பட்டு இந்தியா முழுவதுமாக மேம்பட்ட சப்ளை செயின் தளத்தை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் இந்தத் தீபாவளி அதிரடி விற்பனையில் புதிதாக 10 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என இலக்குடன் பிளிப்கார்ட் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

10 லட்சம் பார்சல்
 

10 லட்சம் பார்சல்

பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் வர்த்தகம் செய்யும் அளவிற்கு மிகச்சிறந்த சப்ளை செயின் தளத்தை வைத்துள்ள நிலையில், இதை மேலும் வலுமையாக்க பிளிப்கார்ட் 27000 ரீடைல் அல்லது மளிகை கடைகளை இணைத்துள்ளது.

இந்த முயற்சி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகங்களில் பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கும் எனப் பிளிப்கார்ட் நம்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart getting ready for The Big Billion Days: onboards 27,000 kirana shops

Walmart-owned Flipkart on Monday said it has onboarded nearly 27,000 'kirana' shops across 700 cities to strengthen its pan-India supply chain ahead of the upcoming festive season's The Big Billion Days shopping on diwali.
Story first published: Tuesday, September 10, 2019, 7:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X