இந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வரும் மோடி தலைமையிலான அரசு, தற்போது இந்திய ராணுவத்தை நவீன மயமாக்குவதற்காக 13,000 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக கூறியுள்ளது.

இந்தியா தற்போது பாதுகாப்பு ரீதியிலான பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்த 13,000 கோடி ரூபாயை செலவழிக்க உள்ளதாகவும், இதற்காக மத்திய அரசு பெரிய அளவில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட துறைகளை நவீனமயமாக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வாகனங்கள் வாங்க திட்டம்
 

வாகனங்கள் வாங்க திட்டம்

இந்த திட்டத்தின் படி, அடுத்த சில ஆண்டுகளில் நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தும் நவீன முறையில் வாங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக காலாட்படை நவீன மயமாக்கலே, முதலில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் படி, இந்திய ராணுவத்திற்கு 2,600 போர் வாகனங்கள் மற்றும் 1,700 எதிர்கால ஆயத்த போர் வாகனங்கள் வாங்குவது உட்பட பல அதிரடி செயல் திட்டங்களை அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

போர் விமானம்

போர் விமானம்

இது தவிர இந்திய விமான படைக்கு 110 மல்டிரோல் போர் விமானம் வாங்கப்படும் என்றும், இதற்காக அடுத்த ஐந்து - ஏழு ஆண்டுகளில், அனைத்து ஆயுதப் படைகளிலும், நவீன மயமாக்கலுக்காக அரசாங்கம் 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடும் என்றும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போதுமான நிதி அரசு ஒதுக்க வேண்டும்

போதுமான நிதி அரசு ஒதுக்க வேண்டும்

அதிலும் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இரு முன்னணி யுத்தத்தின் சாத்தியத்தை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதால், இராணுவம் ஆயுதப்படைகளுக்கு போதுமான நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது என்றும் கூறப்படுகிறது. அதிலும் சீனா தனது வான் மற்றும் கடற்படை சக்திகளை கணிசமாக அளவில் உயர்த்துவதை அரசு அறிந்திருப்பதாகவும், இந்த நிலையில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை இரண்டையும், அதன் எதிரிகளுக்கு இணையான திறன்களுடன் சித்தப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வளவு வசதிகள் தான் இருக்கிறது
 

இவ்வளவு வசதிகள் தான் இருக்கிறது

குறிப்பாக இதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 200 கப்பல்கள், 500 விமானங்கள் 24 தாக்குதல் நீர் முழ்கிக் கப்பல்கள் கொண்ட திட்டத்தை கடற்படை இறுதி செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஏற்கனவே சுமார் 132 கப்பல்கள் மற்றும் 220 விமானங்கள் மற்றும் 15 நீர்முழ்கிக் கப்பல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi மோடி அரசு
English summary

Modi goverment plan to spend Rs.13,000 crore for Indian army in next few years.

Modi government plan to spend Rs.13,000 crore for Indian army in next few years. officials said government's immediate priority is to fast-track infantry modernisation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X