நஷ்டத்தில் 165% உயர்வு.. படுமோசமான நிலையில் பேடிஎம் காரணம் கூகிள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேடிஎம் இந்தியாவில் இருக்கும் பல பேமெண்ட் நிறுவனங்களைப் போல ஒன்றாக மட்டுமே இருந்த நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்து இந்தியாவில் சூப்பர்ஸ்டாராக மாறியது. அந்த அளவிற்கு எங்குத் திரும்பினாலும் பேடிஎம் தான், பெட்டி கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரையில் பேடிஎம் பயன்படுத்த துவங்கி. இப்படிப் பேடிஎம் ஒவர் நைட்டில் ஓபாமா ஆனது.

 

ஆனால் இப்போது பேடிஎம் நிலையே வேறு. போட்டி, வர்த்தகச் சரிவு, மக்கள் மத்தியில் விருப்ப மாற்றங்கள் எனத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

மத்திய அரசு பணமதிப்பிழப்புக் கொண்டு வந்த போது மக்களிடம் தங்களது அன்றாடப் பணப் பரிமாற்றத்திற்கே பணம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்த போது பேடிஎம் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை இந்தியா முழுக்கக் கொண்டு வந்தது. இதில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பேடிஎம்-இன் வெற்றியும், இந்தியாவில் உருவான டிஜிட்டல் பணப் பரிமாற்ற புரட்சி நாட்டில் புதிய வர்த்தகத் துறையை உருவாக்கியது.

பேமெண்ட் துறை

பேமெண்ட் துறை

டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் விரல் விட்டு கணக்குப்போடக்கூடிய அளவில் மட்டுமே நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து முக்கிய வர்த்தக நகரங்களிலும் குறைந்தது 5 பேமெண்ட் நிறுவனங்கள் உள்ளது.

இந்தியாவில் உருவாகியுள்ள இப்புதிய வர்த்தகத் துறையைப் பெரிய நிறுவனங்கள் விட்டுவைக்குமா என்ன..?

கடும் போட்டி
 

கடும் போட்டி

பேடிஎம் நிறுவனத்திற்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் களத்தில் இறங்கியதன் மூலம் இத்துறையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் போட்டி உருவானது. இந்தப் போட்டியைச் சமாளிக்கப் பேடிஎம் பல சலுகைகள், தள்ளுபடிகள், பல தரப்பட்ட வர்த்தக விரிவாக்கம் என அதிரடி கிளப்பியது. இதில் ஒர் அளவிற்குப் பேடிஎம் தனது வர்த்தகத்தைத் தக்க வைத்தாலும், அதிகளவிலான நஷ்டத்தை அடைத்துள்ளது.

மாபெரும் நஷ்டம்

மாபெரும் நஷ்டம்

கூகிள் பே மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போடும் முயற்சியில் மார்ச் 31 வரையில் முடிந்த 2019ஆம் நிதியாண்டு காலத்தில் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 3,959.6 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

கடந்த வருடமும் நஷ்டம் என்றாலும் அதன் அளவு 1,490 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டு நஷ்டத்தின் அளவு மட்டும் 165 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

வருவாய்

வருவாய்

சரி லாபம் தான் இல்லை, வர்த்தகம் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று நினைத்தால் கூகிள் பே மற்றும் போன் பே உடன் போட்டி போட முடியாமல் குறைந்த அளவிலான வர்த்தக வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் பேடிஎம் 3,229 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பெற்று இருந்த நிலையில் 2019ஆம் நிதியாண்டில் 3,319 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

கிளை நிறுவனங்கள்

கிளை நிறுவனங்கள்

பேடிஎம் மட்டும் அல்லாமல் பேடிஎம் மனி, பேடிஎம் பைனான்சியல் சர்வீசஸ், பேடிஎம் எண்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் மற்றும் மற்ற வர்த்தகங்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 4,217 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

முதலீடு

முதலீடு

பேடிஎம் நிறுவனம் நஷ்டம் அடைந்திருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அடுத்த 2 ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் வரையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேகர் சர்மா

விஜய் சேகர் சர்மா

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர் சர்மா பேடிஎம் தாய் நிறுவனத்தில் 15.7 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். இவர் வருடத்திற்கு 3 கோடி ரூபாய் அளவிற்குச் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm cant fight with Gpay, Phonepe: losses Extended to ₹4,217cr in FY19

One97 Communications Ltd, the parent of Paytm loss widened to ₹4,217.20 crore in the year ended 31 March from ₹1,604.34 crore in the year-ago period.
Story first published: Tuesday, September 10, 2019, 8:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X