உண்மையில் ஓலா உபெரால் தான் ஆட்டொமொபைல் துறை வீழ்ச்சியா.. என்ன தான் காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : புதிய வாகனங்களை வங்குவதை விட, ஓலா உபெரையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தார்.

கடந்த செவ்வாய் கிழமையன்று சென்னையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறை மற்றும் உதிரிபாகங்கள் துறையானது, வரவிருக்கும் பி.எஸ்6 புதிய விதிமுறைகளால், பாதிக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.

ஆக இந்த நிலையில் வாகனங்கள் வாங்குவதை விட, ஓலா உபெரினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மில்லியன் கணக்கான மக்களின் மனதில் பதிந்து விட்டது என்றும், இதனால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

 

அடுத்து ஒரே நாடு ஒரே மின்சாரமா..? வங்கிகளைத் தொடர்ந்து அரசு மின்சார நிறுவனங்கள் இணைப்பு!

அரசுக்கு இது ஒரு சாக்குபோக்கு

அரசுக்கு இது ஒரு சாக்குபோக்கு

மேலும் ஓலா உபெர் வண்டி பெருக்கம், கார் வாங்குபவர்களின் மில்லியன் கணக்கான மக்களின் மன நிலையை மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் மறுபுறம் தொழில்துறையினர், விற்பனையை அதிகரிக்க வரியினை குறைக்காததற்கு இது ஒரு சாக்குபோக்கு என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு இந்த டாக்ஸி நிறுவனங்கள் பல வருடங்களாக இருக்கும் ஒன்று, இதற்கு முன்பு ஆட்டோமொபைல் துறையில் இப்படி ஒரு வீழ்ச்சி இருந்ததில்லையே என்றும் கூறப்படுகிறது.

டாக்ஸி விற்பனை வீழ்ச்சி

டாக்ஸி விற்பனை வீழ்ச்சி

மேலும் அனைத்து டாக்சி நிறுவனத்திலும், 8 - 10 சதவிகித பயணிகள் வாகனங்களில் ஒவ்வொரு நிறுவன வாகனங்களையும் வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக மிகப்பெரிய பயணிகள் கார் விற்பனையாளாரான மாருதியிடம், டாக்ஸி பிரிவுக்கான விற்பனை வெறும் 5 - 6 சதவிகிதம் தான் உள்ளது. இது கடந்த ஒரு வருடத்திலிருந்தே பெரியதாக ஒன்றும் மாறவில்லை என்றும், ஆக டாக்ஸி வாகனங்கள் வாங்குவதும் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதே போல் ஹூண்டாய் நிறுவனத்திலும் இந்த விற்பனை 3 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நிலவி வரும் நெருக்கடி
 

நிலவி வரும் நெருக்கடி

அதிலும் நடப்பு நிதியாண்டில், கடந்த ஒரு வருடத்தில் இருந்ததை விட பயணிகள் வாகன விற்பனை கால் பங்கு குறைந்துள்ளது என்றும், இந்த நெருக்கடியை போக்கவே இத்துறையினர் தொடர்ந்து, ஜி,எஸ்.டி விகிதத்தினை குறைக்க கூறி வருகின்றனர். எனினும் பல மாநிலங்கள் இந்த வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன, இந்த நிலையிலேயே மத்திய நிதியமைச்சர் இப்படி ஒரு சாக்கு போக்கினை கூறி வருகிறார். ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா உபெர் மில்லியன் கணக்கான மக்களின் மனப்போக்கை மாற்றி விட்டது என்ற நகைச்சுவையை கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பல டாக்ஸி நிறுவனங்கள் தங்களது டாக்ஸிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில், ஓலா முன்னர் 8,50,000 கார்களையும், மேலும் குத்தகை வடிவில் 50,000 கார்களையும் கொண்டிருந்தது, ஆனால் தற்போது முறையே 15,00,000 மற்றும் 1,00,000 என்றும் அதிகரித்துள்ளன. இவை புதிதாக 8,00,000 கார்களை புதியதாக அதிகரித்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிகரித்துள்ளாதால் இவை அனைத்துமே புதிய கார்கள் என்று சொல்ல முடியாது. இவற்றில் கணிசமான எண்ணிக்கை ஓலா உபெருக்கு சொந்தமானவை. அதில் சில வாகனங்கள் இந்த இரு தளங்களிலுமே பதிவு செய்கின்றன என்றும் கூறப்படுகிறது

கார் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன

கார் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து குறித்தான கருத்துகளை நிறுவனங்கள் பகிர்ந்துள்ளன. குறிப்பாக மாருதி சுசூகி இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் தலைவரான சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், இது குறித்து நாங்கள் எதையும் உறுதியாக கூற முடியாது, ஆனால் பெரிய நகரங்களில் இது சில விளைவுகளை ஏற்படுத்தக் கூடும், ஆனால் பரந்த அளவில் இதன் விளைவுகளை இன்னும் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதே மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான, பவன் கோயாங்காவும் இதுவரை இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வருங்காலத்தில் இது குறித்தான பிரச்சனைகள் எழலாம் என்றும் கூறியுள்ளார்.

ஓலா & உபெரும் வீழ்ச்சி

ஓலா & உபெரும் வீழ்ச்சி

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் இந்த ஆண்டு ஓலா மற்றும் உபெரின் வணிகங்களும் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தான். குறிப்பாக தினசரி ரைடர்ஷிப்பில் கடந்த 2016ல் 80 சதவிகிதம் இருந்த வளர்ச்சி, 2019ல் வெறும் 4.5 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. மேலும் இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2018ல் தினசரி மொத்தம் 3.65 மில்லியன் பயணங்களை மேற்கொண்டன என்றும், ஆனால் தற்போது தினசரி வெறும், 3.5 மில்லியன் பயணங்களையே மேற்கொள்கின்றன என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரம் சாதகமாக இல்லை

பொருளாதாரம் சாதகமாக இல்லை

கார் உரிமையாளர்களின் பொருளாதாரம் கூட புதியதாக கார் வாங்குவதற்கு சாதகமாக இல்லை என்றும், மேலும் வாகனங்கள் பராமரிப்பு செலவு, மைலேஜ், ஓட்டுனர் சம்பளம், இவற்றில் கணக்கில் கொள்ளும் போது ஒரு தனிப்பட்ட நபர் 20 கிலோமீட்டர் பயணம் செய்கிறார் என்றால், அதற்கு 740 ரூபாய் செலவாகும். இதே டாக்ஸியில் செல்லும் போது வெறும் 540 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட தூரம் சென்றால் செலவு அதிகம்

நீண்ட தூரம் சென்றால் செலவு அதிகம்

இதே தூரத்திற்கு தினசரி நீங்கள் பயணம் செய்தால் மாதம் உங்களுக்கு டாக்ஸியில் செல்ல 13,500 ரூபாய் இருந்தால் போதும், இதே சொந்த காரில் செல்லும்போது 18,160 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என்றும், இதே தூரங்கள் அதிகரிக்க இன்னும் செலவுகள் கூடிக் கொண்டே போகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய கார் வாங்குதலுக்கான சாத்தியம் மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Really Ola-Uber pushing auto sector slump?

Really Ola-Uber pushing auto sector slump? last tuesday nirmala sitharaman said The automobile and components industry has been affected by BS6 norms and their mindsets of millennial, who now prefer to have Ola and Uber rather than committing to buy an automobile. but auto firms not aggree this.
Story first published: Thursday, September 12, 2019, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more