பொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல வர்த்தகத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தற்காலிக பணவீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல ஆட்டோமொபைல் துறைகள் பல நாட்களாக உற்பத்தியை நிறுத்தியுள்ளனர் இது பிற வர்த்தகத் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

 

இந்நிலையில் ஜூலை மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உற்பத்தி அளவீடுகள் பெரும்பாலான துறைகளில் பாதிப்படைந்த ஆகஸ்ட் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொழிற்துறை உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. இது எப்படி நடந்தது..?

தொழிற்துறை உற்பத்தி குறியீடு

தொழிற்துறை உற்பத்தி குறியீடு

இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமாக இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பு தான். 5வது முறையாகத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதன் எதிரொலியாகவே ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

இதன் படி மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் வெறும் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வட்டி குறைப்பின் காரணமாக நாட்டின் நுகர்வோர் பணவீக்கமும் 3.15 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி
 

பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 சதவீதம் வரையில் சரிந்து மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இது 6 வருடச் சரிவு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பயம் உருவாகியுள்ளது.

இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் கடந்த 6 வருடத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுகள் சரியாக இல்லாத காரணத்தால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அவர் கண்டிப்பாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்போது என்பது சரியாகத் தெரியவில்லை.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியைக் கணித்து ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வளர்ச்சி அளவை 6.9 சதவீதத்திலிருந்து 5.8-6.6 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல் அடுத்த அரையாண்டு காலத்தில் பொருளாதாரம் 7.3-7.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIP growth in July amid economic slowdown

India’s factory output rose in July amid mounting economic gloom, but the unexpected gain may not indicate a sustained recovery is in sight, likely prompting the central bank's fifth straight rate cut
Story first published: Friday, September 13, 2019, 9:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X