4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்..! ரூ. 20,000 கோடி தேங்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் நான்கு வங்கிகள் யூனியன் செப்டம்பர் 26-ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள்.

 

செப்டம்பர் 26 & 27 ஆகிய இரண்டு தினங்களில் வேலை நிறுத்தம் போக 28ஆம் தேதி செப்டம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று விடுமுறையாகும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை.

எனவே செப்டம்பர் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை மக்கள் வங்கி கிளைக்கு சென்று வங்கி சேவைகளை பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்!

வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு

வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30 2019 அன்று 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு பொதுத்துறை வங்கிகள் ஆக இணைக்கும் திட்டத்தை முன்வைத்தார். அதை எதிர்த்து தான் இப்போது இந்தியாவின் நான்கு வங்கிகள் சங்கம் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறார்கள். All India Bank Officer's Confederation, the All India Bank Officer's Association, the Indian National Bank Officer's Congress and the National Organisation of Bank Officers தான் அந்த நான்கு சங்கங்கள்.

பிரச்னை தீராது

பிரச்னை தீராது

அனைத்து இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு, வங்கி யூனியன் தரப்பில் இருந்து எழுதிய கடிதத்தில் வங்கி யூனியன்கள் வங்கி இணைப்பு அல்லது வங்கி ஒருங்கிணைப்பு ஆகிய நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கிறது. இரண்டு அரசு பொதுத் துறை வங்கிகளின் நிதி அறிக்கைகளை ஒன்றிணைத்து விட்டால் பிரச்சனைகள் தீரும் என்று நினைப்பது தவறு. இதனால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என சொல்லி இருக்கிறார்கள் வங்கி யூனியன் தரப்பினர்கள்.

9 கோரிக்கை
 

9 கோரிக்கை

அதோடு அரசு பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பது அல்லது இணைக்கும் திட்டங்களை கைவிட வில்லை என்றால் வரும் நவம்பர் மாதத்திலிருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் வங்கி யூனியன் தப்பில் சொல்லி இருக்கின்றனர். அதோடு வங்கி அதிகாரிகளுக்கு, வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளையும் இந்த வேலை நிறுத்த அறிவிப்புகளுடன் சேர்த்து முன் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு என்ன

நமக்கு என்ன

சரி இந்த நான்கு நாள் வங்கி வேலை நிறுத்தத்தால் நமக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா..? ஒரு நபருக்கு நாம் கொடுத்திருக்கும் காசோலைகள் கிளியர் செய்யப்பட்டு அவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்று சேர்வதற்கு தாமதமாகும். அதே போல ஆர்டிஜிஎஸ் நெப்ட் போன்ற சேவைகளையும் சரியாக பயன்படுத்த முடியாது. அரசு சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் டெண்டர் போன்றவர்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் டிடி மற்றும் போஸ்டல் ஆர்டர் போன்றவைகளையும் உடனடியாக கிளியர் செய்து பணமாக மாற்றிக் கொள்ள முடியாது.

ஆன்லைன்

ஆன்லைன்

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நமக்கு தேவையான பணத்தை யுபிஐ பணப் பரிமாற்றங்கள் வழியாகவோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வழியாகவோ, ஐ எம் பி எஸ் பணப் பரிமாற்றம் வழியாகவோ சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுக்கலாம். இருப்பினும் வங்கிகளை மட்டுமே நம்பி இருக்கும் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்கள் வங்கி வேலைகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இல்லை என்றால், நீங்கள் அனுப்ப வேண்டிய பணம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்து தான், சென்று சேரும். திட்டமிட்டுக் கொள்ளுங்கள் மக்களே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Strike: Four days bank wont work Rs 20000 crore will stuck in bank

Bank unions announced strike for opposing psb mergers from Sep 26, 2019. Four days bank will not work. Due to the banks non working days, around Rs 20,000 crore will stuck in bank for clearing pruposes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X