பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொடர்ந்து நலிவடைந்து வரும் துறைகளில் உணவு துறையை சார்ந்த பிஸ்கட் உற்பத்தி துறையும் ஒன்று. ஏனெனில் சில நிறுவனங்கள் முன்னதாக பிஸ்கட் தொழில் மிக நலிவடைந்து வருவதாகவும், இதனால் பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்றும், பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறியது.

நலிவடைந்து ஒட்டுமொத்த பொருளாதார சரிவினால், சிறு குறு மட்டும் நடுத்தர நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளன என்றே கூறலாம்.

பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்!

 

அந்த வகையில் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பிலிருந்து, நாளுக்கு நாள் நலிந்து வரும் இந்த தொழிலை சீரமைக்க ஜி.எஸ்.டி வரி விகிதத்தினை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதிலும் தற்போது இருக்கும் 18 சதவிகித வரி விகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும், நலிவடைந்து வரும் இத்துறையை காப்பாற்ற இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் செப்டம்பர் 20ம் தேதி ஜி.எஸ்.டி குறித்தான முக்கிய கூட்டம் நடைபெற இருப்பதையொட்டி பிஸ்கட் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் ஹரேஷ் தோஷி எழுதியுள்ள கடிதத்தில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் கீழ் குறைவான பிஸ்கட்களுக்கு, ஜி.எஸ்.டி வரியினை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

லட்சங்களில் சம்பளம்..! ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..! அப்படி என்ன வேலை..?

ஜி.எஸ்.டி வருகைக்கு முன்பு கிலோ 100 ரூபாய்க்கும் குறைவான பிஸ்கட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்பு அனைத்து வகையான பிஸ்கட்களுக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.

ஆக இத்துறையை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும், சிறு குறும் மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் ஜி.எஸ்.டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவ்வாறு விலைகுறைவான பிஸ்கட்டுகள் தான், மொத்த விற்பனையில், சுமார் 25 சதவிகிதம் பங்கு வகிக்கிறது என்றும், இதன் மொத்த 37,000 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் நிறுவனர், மக்கள் 5 ரூபாய் கொடுத்து பிஸ்கட் வாங்கவே யோசிக்கின்றனர் என்று கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. என்ன தான் ஜி.எஸ்.டி விகிதத்தினை குறைத்தாலும், மக்களின் கையில் பொருளாதாரம் மேம்பட்டால் தானே தேவை என்பது அதிகரிக்கும். இதனால் தான் விற்பனை அதிகரிக்கும். ஆக மக்களின் பொருளாதார நிலை மேம்பட வழி வகை செய்ய வேண்டும். அதே போல் தொழில்துறைகளை ஊக்குவிக்க இது போன்ற வரி விகிதங்களை அரசு மாற்றம் செய்ய வேண்டும் என்பதே சிறு குறு நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Biscuit industries seek GST cut for 5 percent for below RS.100 kg segment.

Biscuit industries seek GST cut for 5 percent for below RS.100 kg segment. According to industry estimates, lower priced biscuits are contribute about 25% in terms of total biscuits industry, its estimated at about Rs 37,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X