நிர்மலா சீதாரமனின் அறிவிப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும்.. ட்விட்டரில் பாராட்டு மழை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் கோவா மாநிலத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. பொருளாதாரம் நலிந்து வரும் இந்த நிலையில், உற்பத்தி துறையில் படு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் இத்துறையை ஊக்குவிக்கும் விதமாக கார்ப்பரேட் வரியை குறைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

 

குறிப்பாக உள்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் முதலீடு மற்றும் இத்துறையில் வளர்ச்சியியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான அனைத்து செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் உள்ளடக்கிய வரி 25.17% குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22% சதவிகிதமாகவும், மேலும் அக்டோபர் 1லிருந்து தொடங்கப்படும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி 15%,மாகவும், கூடுதல் வரியுடன் 17.01%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தெறிக்க விட்ட சென்செக்ஸ்! தெளிவாக வர்த்தகமான நிஃப்டி..!

பியூஷ் கோயல் கருத்து

பியூஷ் கோயல் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தக துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல், இதற்காக நன்றி தெரிவிப்பதாகவும், ஏனெனில் இது முன்னதாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த வரி சுமார் 35 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் அக்டோபர் 1 முதல் 2019லிருந்து, புதியதாக உற்பத்தி துறையில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்கு 15% குறைத்துள்ளது. இது மேலும் புதிய முதலீடுகளை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

என்ன சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்

என்ன சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் கணேஷ், இது குறித்து கருத்து கூறியுள்ள நிலையில், இந்த கார்ப்பரேட் வரி குறைப்பினை வரவேற்பதாகவும், எனினும் இந்த வரி குறைப்பினால் முதலீடுகள் அதிகரிக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறார்
 

பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறார்

இந்த அறிவிப்பானது இந்தியாவை வணிகம் செய்வதற்காக சிறந்த இடமாக மாற்றுவதற்கான சிறந்த அறிவிப்பாகும், மேலும் இது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலராக மாற்ற உதவும் என்றும், இது மேக்இன் இந்தியா திட்டத்திற்கு இது சிறந்த தூண்டுதலை கொடுக்கும் என்றும், இது உலகெங்கிலும் தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்கும் என்றும், மேலும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இது 130 கோடி பேருக்கு உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் வரி குறிப்பைக்கு கருத்து சொல்லும் இளைஞர்கள்

கார்ப்பரேட் வரி குறிப்பைக்கு கருத்து சொல்லும் இளைஞர்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த வரி குறைப்பானது, ஒரு தைரியமான நடவடிக்கை என்றும், இது நிச்சயம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும், அரசு சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கும் என்றும், இது புதிய முதலீட்டாளர்களுக்கு தீபாவளி பரிசு என்றும் கூறியுள்ளனர். எனினும் சிலர் இந்த வரி குறைப்பானது கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளனர். எனினும் சிலர் தனி மனிதர்களுக்கும், ஏழை மக்களுக்கு என்று எந்த விதமான அறிவிப்பும் இல்லை என்றும் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

அமிதாப் காந்த்

அமிதாப் காந்த்

இதே நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த், இது நல்ல நடவடிக்கை என்றும், இது கார்ப்பரேட் துறைக்கு பேருதவியாக இருக்கும் என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். எது எப்படியோ, இது நாள் வரை ஒட்டு மொத்த இந்தியாவை பயமுறுத்திக் கொண்டு இருந்த நிதி அமைச்சகம் ஒரு பெரிய இனிப்புப் பெட்டியை தொழிற் துறையினர் முன் வைத்தது போல் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corporate tax reaction: Youngsters said Nirmala sitharaman announcement boost up economy

Corporate tax reduction annoucement will help boost up economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X