பட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று வரையில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கேள்விக்குறியாக இருந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-இன் ஓற்றை அறிவிப்பால் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. ஆம் இந்தியாவில் கார்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீட்டு அளவு அதிகளவில் குறைந்து வருவது மட்டுமல்லாமல் கடந்த சில தினங்களாக முதலீடுகள் வெளியேறியும் வருகிறது.

இத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பது எப்படி..? என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புச் சினிமா பட பாணியில் நண்பனைத் தாக்க வரும் துப்பாக்கி புல்லட்யை மாற்றொரு நண்பன் எதிர்கொள்வதைப் போல, கிட்டத்தட்ட 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வருவாய் இழந்தாலும் சரி நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியும் முக்கியமாகக் கருதி கார்ப்ரேட் வரியை குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..!

இப்புதிய அறிவிப்பின் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் தங்களது வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரி அளவுகள் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசிடம் இருந்து எவ்விதமான சலுகையும் பெற நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அதிகப்படியான வரியே 25.17 சதவீதம் மட்டும் தான்.

இந்த அறிவிப்பின் மூலம் குறைந்த கார்ப்ரேட் வரி கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடங்களில் நுழைந்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதோடு அக்டோபர் 01, 2019 பின் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் வரியாக 15% வரி செலுத்தினால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து சர் சார்ஜ்கள் மற்றும் செஸ் சேர்த்தால் உற்பத்தி நிறுவனங்கள் 17.01 % வரி மட்டுமே செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு பல வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்து வர பெரும் உதவி செய்யும்.

கார்ப்பரேட் வரி என்பது ஒரு நாட்டின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு இன்ஜின். ஆனால் இதே இன்ஜினுக்குச் சரியான ஆயில், சர்வீஸ் அதாவது வர்த்தகத்திற்கு ஏதுவான சூழ்நிலை, வர்த்தகச் சந்தை இல்லையென்றால் இன்ஜின்கள் நிச்சயம் கெட்டுப்போகும்.

இப்படிப்பட்ட இன்ஜின் கெட்டுப்போகக் கூடாது என்பது தான் மத்திய அரசு தற்போது கார்ப்பரேட் வரியை 22 சதவீதம் வரையில் குறைத்து அசத்தியுள்ளது.

உலக நாடுகளில் ஹாங்காங்-இல் தான் மிகவும் குறைவான கார்ப்பரேட் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஹாங்காங்-இல் வெறும் 16.5 சதவீத வரி தான் விதிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிங்ப்பூரில் 17 சதவீதம், தாய்லாந்தில் 20 சதவீதம், வியட்நாம்-இல் 20 சதவீதம் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian enters top 5 countries list with lower corporate tax

Domestic companies will pay 22% tax on their income from April 1, 2019, versus 30% previously, Finance Minister Nirmala Sitharaman said Friday. The effective rate, including all additional levies, will be 25.2% and applicable on companies that aren’t availing any incentives or exemptions.
Story first published: Saturday, September 21, 2019, 7:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X