இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : சமீப காலமாக வங்கி துறையை சீர்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

அதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது அதை இன்னும் மேம்படுத்தும் விதமாக தற்போது ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அப்படி என்ன நடவடிக்கை என்ன என்று கேட்கிறிர்களா? பொதுவாக நாம் வங்கிகளில் நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் என பல பரிவர்த்தனைகளை செய்யும் போதும், ஏடி.எம்.எம்கள் வழியாக பணம் அனுப்பும் போதும் உரியவர்களுக்கு சென்று சேராமலேயே பணத்தை கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளவார்கள்.

விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்!

பணம் எங்கே சென்றது?

பணம் எங்கே சென்றது?

சில சமயம் இந்த பணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாம் அனுப்பிய வருக்கும் சென்று சேர்ந்திருக்காது. பிறகு நம்முடைய வங்கி கணக்கில் இருந்தும் கழிக்கப்பட்டிருக்கும். வங்கி அலுவலர்களிடம் இதைப் பற்றி கேட்டால், வந்துவிடும், அல்லது போய்விடும் என்ற பதிலை தவிர, வேறு பதிலை சொல்ல மாட்டார்கள். ஆனால் இனி அப்படி இருக்க முடியாது. ஏனெனில் வங்கி அதற்காக 5 நாள்களுக்கு பதிலை தர வேண்டும் என்றும், இல்லையெனில் பணத்தினை திரும்ப தர வேண்டும்.

வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்த்தல்

வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்த்தல்

இது குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்களின் குறைகளைக் குறித்த நேரத்தில் தீர்த்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் என்ற அறிக்கை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. இதில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம், செல்போனில் வாயிலாக பணம் அனுப்புதல், யுபிஐ ஆன்லைன் பரிமாற்றம், கூகுள் பே, போன்பே, வங்கிகளின் ஆப்புகள் என அனைத்திலும் பரிமாற்றம் செய்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கே பெரும் பிரச்சனை
 

வாடிக்கையாளர்களுக்கே பெரும் பிரச்சனை

ஆனால் அப்படி பரிமாற்றம் செய்யும் போது, சில நேரங்களில் சரியான நேரத்தில் சென்று சேருவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பெருத்த பிரச்சனையை சந்திப்பதோடு, மன உளைச்சளுக்கும் ஆளாகின்றனர். இது தொழில் நுட்ப பிரச்சனையாகவும் இருக்கலாம், நெட்வொர்க் பிரச்சனையாக கூட இருக்கலாம், ஆனால் அம்மாதிரியான நேரங்களில் பணம் அனுப்பபட்டவருக்கும் சேராமல், அனுப்பியவரின் வங்கி கணக்கில் இருந்தும் கழித்துக் கொள்ளப்படும்.

ரிசர்வ் வங்கிக்கு புகார்கள்

ரிசர்வ் வங்கிக்கு புகார்கள்

இதனால் வாடிக்கையாளர்கள் சரியான நேரத்துக்கு பணத்தையும் அனுப்ப முடியாமல், பணத்தையும் இழந்து தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. இதில் கொடுமை என்னவெனில் இப்படி காரணம் இல்லாமல் பணம் எங்கே சென்றது என்று தெரியாமல் அல்லல்படுவது தான் கொடுமை. இதனை தவிர்க்க ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் போகவே, ரிசர்வ் வங்கி இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரூ.100 அபராதம்

ரூ.100 அபராதம்

அதன்படி வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் உரியவருக்கும் செல்லாமல், வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டால், அப்பிரச்சனைக்கு 5 நாட்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அவ்வாறு காணப்படாவிட்டால், வங்கி வாடிக்கையாளருக்கு தினசரி 100 ரூபாப் அபராதமாக கொடுக்க வேண்டும். மேலும் இந்த பணபரிவர்த்தனையானது கார்டு மூலம் செய்யப்பட்டால், உரியவர் கனக்கில் பணம் சேராவிட்டால், அடுத்த ஒரு நாளுக்குள் வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கப்படாவிட்டால், நூறு ரூபாய் அபராதமாகவும் வாடிக்கையாளருக்கு வழங்கிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi fines அபராதம்
English summary

RBI says Banks to pay Rs.100 per day penalty for not addressing their transaction issue

Reserve Bank of India says Banks to pay Rs.100 per day penalty for not addressing their transaction issue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X