150 ரயில்களை தனியாருக்கு கொடுக்க அரசு திட்டம்..! வங்கி இணைப்பு போல, அடுத்து ரயில்வே இணைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து அதிரடிகள் தான்..! பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, வங்கிகள் இணைப்பு, ஆதார், ஓரே நாடு ஓரே ரேஷன் கார்ட், ஒரே நாடு ஒரே மொழி என எல்லாமே அதிரடி தான்.

 

குறிப்பாக அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்று லாபம் பார்ப்பதில் இவர்களுக்கு தனி சந்தோஷம். சமீபத்தில் தான் பாரத் பெட்ரோலியம் என்கிற அரசு நிறுவனத்தில், சுமார் 53 % பங்குகளை விற்று லாபம் பார்க்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதே போல சில மாதங்களுக்கு முன் தான் டெல்லி முதல் லக்னெள வரை பயணிக்கும் தேஜாஸ் ரயிலை தனியாருக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. இப்போது அதைத் தொடர்ந்து மேலும் 150 ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிடுவதை ரயில்வே போர்ட் தலைவரே சொல்லி இருக்கிறார்.

45,000-த்தை தொடும் மார்கன் ஸ்டான்லி கணிப்பு..! நாளையும் ஏற்றம் தொடருமா..?

எந்த ரயில்கள்

எந்த ரயில்கள்

இதுவரை எந்த எந்த ரயில்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட இருக்கிறது என்கிற விவரங்களை இதுவரை தேர்வு செய்யவில்லையாம். ஆனால் டெல்லி மும்பை, டெல்லி ஹவுரா போல, சரியான வழித் தடங்களை தனியார் இயக்கத்துக்கு விடப் போகிறார்களாம். கூடிய விரைவில் வழித் தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் ரயில்களை இயக்க ஏலம் விடப்படும் எனச் சொல்லி இருக்கிறார் ரயில்வே போர்டின் தலைவர் வினோத் குமார்.

ஏன் தனியார்

ஏன் தனியார்

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் பயணிகளின் தேவைக்கு தகுந்தாற் போல ரயில்கள் விடப்படும். அப்போது காத்திருப்பு பட்டியல் எல்லாம் இருக்காது. அதற்கு நிறைய ரயில்கள் தேவையாக இருக்கிறது. எனவே இந்த இடத்தில் தான் தனியார் ரயில்கள் தேவையாக இருக்கிறது என்கிறார் ரயில்வே போர்ட் தலைவர். அதோடு வரும் தனியார் நிறுவனத்தினர்கள் புதிய ரக ரயில்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் ரயில்வே போர்ட் எதிர்பார்க்கிறதாம்.

எதிர்பார்ப்பு
 

எதிர்பார்ப்பு

இந்திய ரயில்வே வழித் தடங்களை ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், தங்களுக்கான டெக்னாலஜிகளைக் கொண்டு வர வேண்டும். அதாவது தங்கள் டெக்னாலஜியில் இயங்கும் ரயில்களைக் கொண்டு வர வேண்டும். அதோடு புதிய புதிய வழிகளில் பயணிகளுக்கு ரயில்வே சேவைகளை வழங்குவது, புதிய வழிகளில் சரக்குகளைக் கையாள்வது போன்றவைகளை, ஏலத்தில் பங்கு எடுக்கும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரயில்வே போர்ட் எதிர்பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார் ரயில்வே போர்டின் தலைவர் வினோத் குமார்.

ரயில் கட்டாயமா..?

ரயில் கட்டாயமா..?

ஏலத்தில் பங்கு எடுப்பவர்கள், கட்டாயம் தனி ரயிலைக் கொண்டு வர வேண்டுமா எனக் கேட்டால்... "கூடுமானவரை புதிய ரயில்களுடன் வந்தால் நல்லது" எனச் சொல்கிறார்கள். அப்படி முடியவில்லை என்றால் வெளிநாடுகளில் இருந்து ரயிலை இறக்குமதி செய்யவோ அல்லது இந்திய தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளவோ அல்லது இந்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளவோ அனுமதிக்க இருப்பதாகவும் சொல்கிறார் ரயில்வே போர்டின் தலைவர் வினோத் குமார்.

இணைப்பு

இணைப்பு

150 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது எல்லாம் ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கம் எட்டு ரயில்வே தயாரிப்பு தொழிற்சாலைகளை (இன்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டி) இரண்டாகக் குறைக்கவும் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம். ஒரு நிறுவனம் இந்திய ரயில் இன்ஜின்கள் தயாரிப்புக்காகவும், மற்றொரு நிறுவனம் இந்திய ரயில் பெட்டி உற்பத்திக்காகவும் என்கிற அடிப்படையில் நிறுவனங்களை இணைக்கப் போவதாகவும் யோசித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார் ரயில்வே போர்ட் தலைவர் வினோத் குமார். சமீபத்தில் தான் 10 அரசு வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க நிதி அமைச்சர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள் பலமாக இருக்கிறதே, வர்த்தக யூனியன்கள் எல்லாம் தனியார் ரயில்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்களே, இவர்களுக்கு எல்லாம் எப்படி, என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு "ரயில்வே போர்ட் ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினரிடமும் கலந்து பேசி விவாதித்து தான் ஒரு முடிவு எடுக்கும்" என வழக்கமான டயலாக்கை உதிர்த்து இருக்கிறார் ரயில்வே போர்ட் தலைவர் வினோத் குமார். தனியாருக்கு முதலில் 2 ரயில், இப்போது தனியாருக்கு 150 ரயில், பாஜக ஆட்சி முடிவதற்குள் தனியார் கீழ் தான் மொத்த ரயில்வே அமைப்பும் இயங்கும் போலிருக்கிறதே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway privatization: 150 trains to be privatized in next few years

In 2023 - 24 years India will see nearly 150 private trains running in various rail routes.
Story first published: Monday, September 23, 2019, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X