மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஈபிஎப் மீதான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது.
இப்புதிய அறிவிப்பின் மூலம் 2018-19 நிதியாண்டுக்கான பிராவிடென்ட் பண்டுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்படும். இப்புதிய வட்டி விகித மாற்றம் EPFO தளத்தில் இருக்கும் 6 கோடி ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

EPFO அமைப்பு
EPFO அமைப்பு இதுநாள் வரையில் பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது 8.55 சதவீத வரியைக் கணக்கிட்டு ஊழியர்களுக்குக் கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டு உள்ள புதிய வட்டி விகிதத்தின் மூலம் இனி பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது 8.65 சதவீத வட்டியில் கணக்கிட்டு ஈபிஎப்ஓ அமைப்பு நமக்குக் கொடுக்கும்.

சந்தோஷ் கங்வார்
இதுகுறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், "இந்த அறிவிப்பை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கு ஈபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2018-17 நிதியாண்டின் 8.55 சதவீதத்தை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்." என்று கூறினார்.

54,000 கோடி ரூபாய்
இப்புதிய வட்டி விகித மாற்றத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பான EPFO-விற்கு 54,000 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அளித்துள்ளது. இதன் மூலம் 6 கோடி வாடிக்கையாளர்களும் பயன்பெறுவார்கள்.

கூடுதல் வட்டி தொகை
இந்த மாற்றத்தின் மூலம் இனி பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது கூடுதல் வட்டி தொகை கிடைக்கும். அதேபோல் கணக்கில் இருக்கும் பணத்திற்கும் கூடுதல் வட்டி தொகை கிடைக்கும். வருமான வரி அதிகமாகச் செலுத்துவோர், தங்களது பிஎ பிடித்தம் தொகையைக் குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்திக்கொள்ள முடியும். இப்படி உயர்த்தும் போது உங்கள் பணம் பிஎப் கணக்கிற்குச் செல்லும் இதனால் நீங்கள் அதிகளவிலான வருமான வரிச் சலுகையைப் பெற முடியும்.

பாதுகாப்பான நிதி
அதேபோல் எப்போதும் பிஎ பணத்தைத் திரும்பப் பெறாதீர்கள், நீங்கள் நிறுவனத்தை மாற்றினாலும், அந்தக் கணக்கிற்கு அதை மாற்றிவிடுங்கள். பிஎப் என்பது பாதுகாப்பான நிதி மட்டுமல்ல நீண்ட கால நோக்கில் அதிகப் பல தருபவை. எனவே பிஎப் நிதியைச் சரியான முறையில் கையாளுங்கள்.