டெல்லி: அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றிக்காக யோசிக்காமல் அதிகம் சலுகைகளை அள்ளி விடுவதை, நாமே கண் கூடாகப் பார்த்து இருக்கிறோம். இப்போது நம் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வரித் துறை அதிகாரியாக இருந்த அனுபவம் கொண்டவர். அரசுக்கு வருமானம் இல்லை என்றால் என்ன ஆகும் என நன்றாகத் தெரியும்.
இப்போது இவரும் சராசரி அரசியல்வாதிகளைப் போலவே இவரும் இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளித் தெளித்து விடத் தொடங்கி இருக்கிறார். அதுவும் வழக்கம் போல தேர்தல் வெற்றிக்காக. அடுத்த வருடம் டெல்லி யூனியன் பிரதேசம் சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பெண்களுக்கு டெல்லி மெட்ரோ இலவசம் என்பதில் தொடங்கிய சலுகைகள், இப்போது டெல்லி மின்சார வாரியம் வரை வந்து நிற்கிறது. மேலே தலைப்பில் சொன்னது போல டெல்லி நகரத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் மாதம் 200 யூனிட் வரை மட்டும் மின்சாரம் பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்.
பி வி சிந்து காட்டில் மழை..! இரண்டு வருடத்துக்கு விளம்பர தூதரா..? அதுவும் இந்த நிறுவனத்துக்கா..?
ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர், ஒரே மாதத்தில் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் பயன்படுத்திய மொத்த யூனிட்டுக்கும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். இதனால் அரசுக்கு சுமார் 1,800 முதல் 2,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் சொல்லி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மிக முக்கியமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தவில்லை என்பதையும் அடிக் கோடு போட்டுச் சொல்கிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்த சலுகையைப் பெற வீட்டு வாடகைக்கான ஒப்பந்தம் மற்றும் வீட்டு வாடகைக்கான ரசீதுகள் கொடுத்து, மின்சார வாரியத்தில் 3,000 ரூபாய் டெபாசிட் செய்து, புதிய மீட்டரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். அப்போது தான் இந்த சலுகையைப் பெற முடியுமாம்.
அரவிந்த் கெஜ்விர்வால் கடந்த 2015-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது முதலில் 50 % மின்சார கட்டணம் மானியமாக வழங்கப்பட்டது. இது 400 யூனிட்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு மாதமும் 20,000 லிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.