மீண்டும் சிஇஓ ஆனார் சச்சின் பன்சால்.. 740 கோடி ரூபாய் டீல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஸ்டார்ட்அப் துறையின் முதல் யூனிகார்ன் என்ற பெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான சச்சின் பன்சால் மீண்டும் ஒரு NBFC நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் Chaitanya Rural Intermediation Development Services Pvt. Ltd (CRIDS)என்ற ஒரு NBFC நிறுவனத்தில் 739 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆகியுள்ளார்.

CRIDS வங்கி சேவை

CRIDS வங்கி சேவை

CRIDS தற்போது இந்தியாவில் 5 மாநிலங்களில் வங்கி சேவை முழுமையாகக் கிடைக்காத மக்களுக்குச் சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம் இரு சக்கர வாகன கடன், வீட்டுக் கடன், சிறு தொழில்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

5 மாநிலம்

5 மாநிலம்

இந்நிறுவனம் இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வர்த்தகக் கிளையைக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனத்தை ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி ஆகியோர் நிறுவினர்.

சச்சின் பன்சால் வங்கித்துறையில் முதல் முறையாக நுழைந்து உள்ள நிலையில் இத்துறையைப் பற்றி அறிந்துகொள்ளவும், CRIDS வர்த்தகத்தைப் பன்மடங்கு உயர்த்தவும் தான் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிறுவனர்கள்
 

நிறுவனர்கள்

சச்சின் பன்சால் CRIDS வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி வெளியேறுவார்கள் என நினைத்த போது, சச்சின் பன்சால் இருவரும் தற்போது இருக்கும் அதே பதவியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் எனத் தெரிவித்தார் சச்சின்.

ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி

ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி

சச்சின் பன்சாலின் வருகை இந்நிறுவனத்தைப் பல வழிகளில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும், குறிப்பாக இணைய வங்கி சேவையில் விரிவாக்கம் செய்யச் சச்சின் பெரிய அளவில் உதவுவார் என ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி நம்புகின்றனர்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வெளியேறிய சச்சின் பன்சால் பிளிப்கார்ட் விற்பனைக்குப் பின்பு பல நூறு கோடிகளைப் பெற்றார். இப்பணத்தைப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது ஆனந்த் ராவ், சமித் ஷெட்டி அவர்களின் CRIDS வங்கியில் முதலீடு செய்துள்ளார் சச்சின் பன்சால்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sachin Bansal became CEO of CRIDS on investing ₹739 crore

Flipkart co-founder Sachin Bansal on Wednesday forayed into the financial services business by acquiring a majority stake in Chaitanya Rural Intermediation Development Services Pvt. Ltd (CRIDS), a non-banking financial company (NBFC), for ₹739 crore.
Story first published: Thursday, September 26, 2019, 9:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X