உபர் CEO அதிரடி பேச்சு..! பிரைவசி சட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரிய பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் கடுமையான நெறிமுறைகள் மற்றும் சட்டங்கள் எதுவும் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பாதிக்க கூடாது என உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லி இருக்கிறார் உபர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தாரா கோஸ்ரோவ்ஷாஹி ( Dara Khosrowshahi).

 

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் போன்றவைகளை கொண்டு வர கடுமையான சட்டதிட்டங்கள் மிகப்பெரிய தடையாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் உபர் முதன்மை செயல் அதிகாரி தாரா. இவர் நேற்று பிளூம்பர்க் குளோபல் பிசினஸ் அமைப்பு கூட்டத்தில் பேசிய போது இந்த விவரங்களைச் சொல்லி இருக்கிறார்.

உபர் CEO அதிரடி பேச்சு..! பிரைவசி சட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு..!

உபர் ஒரு நாடு, இரண்டு நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்ற வில்லை உலகளவில் அனைத்து நாடுகளின் சட்ட திட்டங்களையும் பின்பற்றி வருகிறோம். சட்ட திட்டங்கள் தெளிவாக இருந்தால் அவைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. சில சட்ட திட்டங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கின்றன. எனச் சொல்லி இருக்கிறார் உபேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தாரா.

அப்படி கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தை சொல்கிறார் தாரா. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கடுமையான சட்ட திட்டங்களால் அந்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவது மிகவும் சிரமமான விஷயம் எனவும் நெற்றியில் அடித்தார் போல் போட்டு உடைத்து இருக்கிறார் உபர் முதன்மை செயல் அதிகாரி தாரா. இப்படி சிக்கலான சட்ட திட்டங்களில் இருந்து சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அப்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் என்ன பெரிய பிரச்சனை எனக் கேட்டால்... 'டேட்டா' என ஒரு வார்த்தையில் பதில் கொடுக்கிறார் தாரா. ஐரோப்பிய பிராந்தியத்தில் தொடர்ந்து பெரிய டெக்னாலஜி நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள் போன்றவர்கள் மீதே வழக்குத் தொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அதோடு பிரைவசி தொடர்பாகவும் சில சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள் இயற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்த டேட்டா தொடர்பான பிரைவசி சட்டங்களால் அங்கு வியாபாரம் செய்வது பெருத்த சிக்கலுக்கு உள்ளாகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் தங்கள் போக்கில் தங்கள் நிறுவன வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை எடுத்து பயன்படுத்த முடியவில்லை எனச் சொல்லி இருக்கிறார் உபரின் முதன்மை செயல் அதிகாரி. இப்போது இந்த டேட்டா பிரைவசி அமெரிக்கா போன்ற மிகப் பெரிய நாடுகளிலும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள் எனவும் எச்சரித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber CEO said that privacy regulations are affecting start up companies

Tougher privacy regulations are affecting start up companies. These regulations are making harder for start up companies too take data from their users.
Story first published: Thursday, September 26, 2019, 13:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X