300% அதிகரித்த விற்பனை.. ஏன் எதற்குன்னு காரணத்த கேட்ட கடுப்பாயிருவீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : உலகம் முழுவதும் மிக பிரபலமான சர்ச்சையான, ஒரு சமூக வலைதள செயலி தான் டிக்டாக். இதை பற்றி இன்றைய இளைஞர்களில் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம்.

அதிலும் பட்டி தொட்டியெல்லாம் பரவிக் கிடக்கும் இந்த செயலி மூலம், பிறந்த குழந்தை முதல் வயதான தாத்தா பாட்டி வரை பங்கேற்பதும், அதனை பின்பு ஆன்லைனில் பதிவு செய்வதும் மிக பிரபலமாகி வருகிறது.

ஒரு புறம் இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்து வருவதும், இந்த டிக்டாக் ஆப் ஒரு பொழுது போக்கு அம்சம் என்றாலும், இதற்கு இன்று பலர் அடிமையாகி வருவதே உண்மை என்றும் கூறப்படுகிறது. எனினும் இதனை சிலர் வியாபார ரீதியாகவும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் சில வர்த்தகங்களும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

எதற்கு நன்றி
 

எதற்கு நன்றி

ஆன்லைன் - காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்டு, டிக்டாக் நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும், ஏனெனில் இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உதிர்பாகங்களான விற்பனையில் எப்போதும் இல்லாத அளவுக்கு டிரைபாடு, கேபிள்கள், இணைப்பிகள், பயணத்தின் போது உபயோகிக்கும் கேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் விற்பனையானது, இந்தியாவில் உள்ள மின் வணிக தளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் சுவை மிகுந்த கேக்குகளை போல சூடாக வியாபாரம் நடக்கின்றன. அதிலும் இப்படி விற்பனையாகும் அதிக சாதனங்கள் பெரும்பாலும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் இது குறித்து கூறுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் குறித்த விற்பனை ஒரு வருடத்தில் 10 மடங்கு அதிகரித்து, 300% அதிகரித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இன்னும் சுவாரஸ்மாக சொல்லப்போனால் நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து, அதிக ஆர்டர்கள் வருவதாகவும், இத்துறையை சேர்ந்த உள்நாட்டு தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இது தவிர பலர் இதை வியாபார ரீதியாகவும் இந்த டிக்டாக் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வீடியோக்களுக்கு விளம்பரங்கள் மூலம் காசு பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் இது தற்போது கிராமப்புறங்களில் மிக அதிரடியாக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

பல்ப் விற்பனை அதிகரிப்பு

பல்ப் விற்பனை அதிகரிப்பு

இது தவிர டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்வதற்காக சரியான லைடிங்க் வைப்பதற்காக பலவிதமான பல்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் இது சார்ந்த நிறுவனங்களும் பணம் பார்த்துள்ளன என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நாம் பதிவிடும் வீடியோக்களை அதிகளவில் பார்த்து சேர் செய்தால் மட்டுமே, பதிவாளர்களுக்கு விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் கிடைக்கும் என்பதால், தங்களது வீடியோவை அனைவரும் பார்க்க வேண்டும், என்பதற்காக பலர் பல உபகரணங்களையும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லைடிங்க்ஸ் அமைக்கும் சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜிம்பல்ஸ் விற்பனை அதிகரிப்பு
 

ஜிம்பல்ஸ் விற்பனை அதிகரிப்பு

போன் மற்றும் கேமராக்களை உபயோகப்படுத்த ஜிம்பல்ஸ் எனப்படும் ஸ்மால் ஸ்டேண்டுகளின் விற்பனையும் கடந்த 2018 - 2019ல் 200% அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் விலை 3,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் இந்த டிக்டாக் செயலி, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வரந்தாலும், மறுபுறம் இதனால் சில நிறுவனங்கள் ஆதாயாம் பார்ப்பதும் நிதர்சனமான உண்மையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon and Flipkart have to thank for controversial TikTok chinese app

Amazon and Flipkart have to thank for controversial TikTok chinese app, Because it's increased some business activities
Story first published: Saturday, September 28, 2019, 18:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X