699 ரூபாய்க்கு மொபைலா..! ஜியோவின் தீபாவளி அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 699 ரூபாய்க்கு மொபைல் ஃபோனா..? என்ன கதை விடுகிறீர்களா..? என கொந்தளிக்க வேண்டாம்..! உண்மையாகவே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று ஒரு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறார்கள்.

 

இந்த சலுகையின் பெயரே ஜியோ ஃபோன் தீபாவளி 2019 சலுகை (JioPhone Diwali 2019 Offer). இந்த சலுகையின் கீழ் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஜியோ ஃபோன்கள் வெறும் 699 ரூபாய்க்கு விற்க இருக்கிறார்களாம். இந்த சலுகை தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை ஒட்டி அறிவித்து இருக்கிறார்களாம்.

699 ரூபாய்க்கு மொபைலா..! ஜியோவின் தீபாவளி அதிரடி..!

இந்த சலுகை வழியாக 800 ரூபாயை நறுக்கென சேமிக்கலாம். இந்த சேமிப்புக்கு எந்த ஒரு விதி முறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய ஃபோன்களைக் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைகள் எல்லாம் கிடையாது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறது.

இந்த ஜியோ ஃபோன் தீபாவளி 2019 சலுகையைப் பயன்படுத்தி ஜியோ உடன் இணையும் வாடிக்கையாளர்களுக்கு சுமாராக 700 ரூபாய் மதிப்புள்ள டேட்டா பேக்குகள் வழங்கப்படுமாம். அதோடு இந்த ஜியோ ஃபோன் தீபாவளி 2019 சலுகையில், ஜியோ உடன் இணைபவர்கள் செல்ஃபோனை வாங்கிய பின் செய்யும் முதல் 7 ரீசார்ஜ்களுக்கு ஒவ்வொரு முறையும் 99 ரூபாய் மதிப்புள்ள டேட்டா பேக்குகளையும் இலவசமாகக் கொடுக்க இருக்கிறார்களாம். இப்படியாக ஜியோ நிறுவனம் தன் பக்கம் அனைத்து வாடிக்கையாளர்களையும் இழுக்க சலுகைகளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கிறது.

ம்ஹும்... இந்தியப் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி கண்டாலே பெரிய விஷயம்..! S&P அதிரடி..!

ஆக செல்ஃபோன் விலையில் 800 ரூபாய் தள்ளுபடி + ஏழு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் 7 * 100 = 700 ரூபாய்க்கான டேட்டா பேக்குகள் என மொத்தமாக கணக்கிட்டால் மொத்தம் 1,500 ரூபாய்க்கான சலுகைகளைக் கொடுக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்தியாவில் எந்த ஒரு தனி மனிதரும் இணையத்தை பயன்படுத்தாமலோ அல்லது இந்த டிஜிட்டல் புரட்சியின் நன்மைகளை அடையாமலோ இருக்கக் கூடாது. இந்த ஜியோ ஃபோன் தீபாவளி 2019 சலுகை வழியாக, இதுவரை இணையத்தை பயன்படுத்தாத மக்கள், இணையத்தைப் பயன்படுத்த, ஒவ்வொரு நபர் மீதும் 1,500 ரூபாய் முதலீடு செய்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jio phone ஜியோ
English summary

JioPhone Diwali 2019 Offer: Now jio phones are available at Rs 699

Reliance jio announced a new offer called JioPhone Diwali 2019 Offer. Through this offer, the jio phone is now available at Rs 699.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X