வரி வசூலில் சொதப்பல்! கடுப்பில் நிதி அமைச்சகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை தலை விரித்து ஆடுகிறது என்பதற்கு இந்திய அரசின் வரி வசூலும் ஒரு வலுவான சாட்சியமாக அமைந்து இருக்கிறது.

இந்தியாவின் முக்கிய வருவாய்களில் வரி வருவாய் தான் முதல் மற்றும் அத்தியாவசிய வருவாயாக இப்போது வரை இருக்கிறது.

2019 - 20 நிதி ஆண்டுக்கு, இந்தியாவின் மொத்த வரி வருவாய் கணக்கிட்டால் 24.61 லட்சம் கோடி ரூபாய் என கணித்து இருக்கிறார்கள். இந்த பெரிய வரி வருவாயில் இருந்து தான் தேசிய பேரிடர்களுக்கான நிதி ஒதுக்கீடு, மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கீடு போன்றவைகளை ஒதுக்குவார்கள்.

அடி மேல் அடி வாங்கும் அரசு.. 3வது மாதமாக தொடர்ந்து ஜிஎஸ்டி வரிவசூல் குறைவு.. கவலையில் மத்திய அரசு!

கார்ப்பரேட் வரி
 

கார்ப்பரேட் வரி

இந்த 24.61 லட்சம் கோடி ரூபாய் எங்கிருந்து எல்லாம் வருகிறது எவ்வளவு வருமானம் வருகிறது எனத் தெரியுமா..? வரி வருவாயில் அதிகபட்சமாக சுமார் 31 சதவிகிதம் 7.66 லட்சம் கோடி ரூபாய், கார்ப்பரேட் வரியாக வருகிறது. சமீபத்தில் செப்டம்பர் 20, 2019 அன்று அதிரடியாக கார்ப்பரேட் வரியைக் குறைத்துவிட்டார்கள். இதனால் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு இழப்பு. ஆக இந்த வரி வருவாயைச் சரி கட்ட வேண்டும்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

அடுத்ததாக ஜிஎஸ்டியில் இருந்து தான் அதிக வரி வருவாய் வருகின்றன. இந்த ஜிஎஸ்டியில் இருந்து 2019 - 20 நிதி ஆண்டுக்கு 26.95 சதவிகிதம் 6.63 லட்சம் கோடி ரூபாய் வர வேண்டும். ஆனால் தொடர்ந்து ஜிஎஸ்டி குறைவாகத் தான் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் 2019-ல் கூட 91,916 கோடி ரூபாய் தான் வரி வசூலித்து இருக்கிறார்களாம்.

சில மாதங்கள்

சில மாதங்கள்

கடந்த ஜூலை 2019-ல் ஜிஎஸ்டி வரி வருவாய் 1.02 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் 2019-ல் 98,202 கோடி ரூபாயாக சரிந்தது. இப்போது செப்டம்பரில் 91,916 கோடியாக மேலும் சரிந்து இருக்கிறது. இதில் வியாபாரிகளுக்குக் கொடுக்க வேண்டிய ரீ ஃபண்ட் தொகைகள் வேறு பாக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள் வரித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள். ஆக அந்த ரீ ஃபண்ட் தொகை எல்லாம் போக நிகர ஜிஎஸ்டி வரி வருவாயைக் கணக்கிட்டல் இன்னும் குறையுமே..?

வருமான வரி
 

வருமான வரி

ஜிஎஸ்டிக்குப் பிறகு, வருமான வரி மூலம் தான் அரசுக்கு பெரிய வருமானம் வருகிறது. 23.12 சதவிகிதம் அதாவது 5.69 லட்சம் கோடி ரூபாய் வருமானம் வரும் எனக் கணித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம், வருமான வரி தாக்கல் செய்தாலே போதும் எனக் கொண்டு வந்ததும் பியுஷ் கோயலின் இடைக்கால பட்ஜெட் தான் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

அதோடு ஏகப்பட்ட அமைப்பு சார் (Organized sector) ஊழியர்களுக்கே பலமான வேலை இழப்புகள் வேறு நடந்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக ஆட்டோமொபைல் துறை. இப்படி வரிச் சலுகை + வேலை இழப்புகள் என எல்லாம் ஒன்று சேர்ந்தால் வருமான வரி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா..? என்கிற கேள்வி எழுகிறது. சமீபத்தில் கூட அரசின் நேரடி வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை எனச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கலால் மற்றும் சுங்க

கலால் மற்றும் சுங்க

இதன் பிறகு அதிக வருமானம் கொடுக்கிறது என்றால் அது மத்திய கலால் மற்றும் சுங்க வரி தான். 2019 - 20 நிதி ஆண்டில் கலால் வரி வழியாக 12.19 சதவிகிதம் 3 லட்சம் கோடி ரூபாய் மற்றும் மத்திய சுங்க வரி வழியாக 6.33 சதவிகிதம் 1.55 லட்சம் கோடி ரூபாயும் வசூலிக்க வேண்டும். ஆனால் இதுவரை சுங்க வரி கலால் வரி வசூல் எப்படி இருக்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

உள் நாட்டில் பொருளாதார நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் காரணமாக கலால் வரி மற்றும் சுங்க வரி அதிகம் விதிக்கப்படும் பொருட்களை வாங்க மக்கள் தயாராக இல்லை என்பதை கலால் வரி அதிகம் விதிக்கப்படும் கார்கள் விற்பனை சரிவிலேயே தெரிகிறது. சாதாரண சோப்பு, பேஸ்ட், உணவுப் பொருட்களின் வியாபார அளவின் வளர்ச்சியே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது எனும் போது, அதிக கலால் வரி அல்லது சுங்க வரி விதிக்கப்படும் பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் தானே..?

இந்த சூழலை அரசு எப்படி எதிர் கொள்ளப் போகிறது..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax revenue collection is in critical stage finance ministry is in stress

Central government Tax revenue collection is in very critical stage and upcoming months also the tax revenue collection may not be in good shape. So Finance ministry is in stress to meet out the fiscal deficit and to increase the tax revenue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more