சு சுவாமி அதிரடி.. உண்மைய கேட்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க.. வல்லுனர்களை பயமுறுத்தாதீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

வல்லுநர்களை பயமுறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. மோடிக்கு சு.சுவாமி அட்வைஸ்!-வீடியோ

வழக்கமாக தான் எப்போது எதை பேசினாலும் அரசியல் ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி, தனது அதிரடியான கருத்தால் அனைவரையும் தன்பால் கவரும் திறன் கொண்டவர் தான் சுப்பிரமணிய சுவாமி.

இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தாலும், அவ்வப்போது தன் கட்சியையே சாடுவதும் வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடிக்கு, நீங்கள் உண்மை நிலையை கேட்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார நிபுணர்களைப் பயமுறுத்த வேண்டாம் எனவும் அதிரடியாக தனது கருத்தை போட்டு உடைத்துள்ளார்.

பொருளாதார நிபுணர்களை பயமுறுத்த வேண்டாம்

பொருளாதார நிபுணர்களை பயமுறுத்த வேண்டாம்

ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும் இவர், கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, பிரதமர் தனது விரும்பதக்காத உண்மையை கேட்க, ஒரு பக்குவ மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிலும் பொருளாதார நெருக்கடியை விரட்ட விரும்பினால் தனது அரசாங்கத்தின், பொருளாதார நிபுணர்களை பயமுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை

வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை

ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரின் இந்த கருத்துகள், அரசு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வந்துள்ளது. மேலும் அரசானது வளர்ச்சியை முடுக்கிவிட பல முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இதில் வழக்கத்திற்கு மாறான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறியவர், அரசின் டி மானிடைசேஷனையும் குற்றம் சாட்டியுள்ளார்.

வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை

வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை

குறிப்பாக ரிசர்வ் வங்கியும் சரி மற்றும் நிதியமைச்சகமும் சரி உண்மையான நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அவசர அவசரமாக ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அரசு அதிகளவு வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இன்றைய பொருளாதாரம் இருக்கும் நிலையில், குறுகிய காலத்திற்கும், நடுத்தர காலத்திற்கும் மற்றும் நீண்ட காலத்திற்கும் ஏற்ப கொள்கைகள் தேவை. ஆனால் அது இன்று இல்லை.

வல்லுனர்கள் உண்மை சொல்ல பயப்படுகிறார்கள்

வல்லுனர்கள் உண்மை சொல்ல பயப்படுகிறார்கள்

பிரதமருக்கு ஆலோசனை சொல்ல சேர்த்திருக்கும் பொருளாதார வல்லுனர்கள், பிரதமரிடம் உண்மையை சொல்ல பயந்துவிட்டதாக நான் அஞ்சுகிறேன் என்றும் கூறியவர், பிரதமர் ஒரு புத்தக வெளியீட்டில், தான் மைக்ரோ திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறியிருந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார் சுவாமி. ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் சிறிய திட்டங்களை பற்றி மோடி கவனம் செலுத்துகிறார். ஆனால் பொருளாதாரத்துக்கு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணுகுமுறைகள் தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ராவின் முக்கிய சீர்திருத்தங்கள்

ராவின் முக்கிய சீர்திருத்தங்கள்

பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பிரதமரை கொண்டிருக்க தேவையில்லை, ஆனால் 1991ல் மன்மோகன் சிங் தலைமையிலான நிதி அமைச்சகத்தை வைத்திருந்த பி.வி நரசிம்ம ராவின் புத்திசாலிதனத்தை சுட்டிக் காட்டினார்.மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலும், நிதியமைச்சராக இருந்த காலத்திலும் இருந்த பொருளாதார சீர்திருத்தங்களை போலவே அதிகம் செய்ய முடியாது என்று கூறிய சுவாமி, ராவின் முக்கிய சீர்திருத்தங்களை அடிக்கோடிட்டு காட்டினார்.

வருமான வரியை ஒழிக்க கோரிக்கை

வருமான வரியை ஒழிக்க கோரிக்கை

வருமான வரியை ஓழிப்பதற்கான தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது வீட்டு சேமிப்பு அதிகரிப்பு மற்றும் சிறந்த வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்றும் கூறியவர், இது வரி மதிப்பீடுகளுடன் தொடர்புடைய ஊழலையும் குறைக்கும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி மட்டும் அல்ல, முன்னாள் பிரதமரும் நிதியமைச்சராக இருந்தவரும் மன்மோகன் சிங் கூறியிருந்ததையும், அரசு ஏற்றுக் கொண்டு அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subramanian Swamy said to PM Modi develop a temper to listen to truth factor

Subramanian Swamy said to PM Modi develop a temper to listen to truth factor, also he blamed the demonetisation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X