பாகிஸ்தானுக்கு செக்..! மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா என்கிற பெரிய துணை கண்டத்தில் இருந்து 1947-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நம் சகோதர நாடு தான் பாகிஸ்தான். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.

அதன் பிறகு சில பெரிய போர், அவ்வப் போது தீவிரவாத தாக்குதல்கள் என இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மத்தியில் எப்போதுமே, எல்லாமே பிளவு தான், சண்டை தான்.

அன்று முதல் இன்று வரை பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு போலவும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரி நாடு போலுமே உலக அரங்கில் காணப்படுகிறது. சரி பழைய பிரச்னைகளை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு விஷயத்துக்கு வருவோம்.

சிக்கல்
 

சிக்கல்

இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாத சிக்கல்களை ஒழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானும் தீவிரவாத சிக்கல்களினால் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து விடக் கூடாது என போராடி வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் நிலைமையை சரி செய்ய பணம் வேண்டுமே. இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தானுக்கு இரண்டு கரங்களையும் நீட்டி பணம் கொடுத்து ஆதரிப்பது சீனா மட்டும் தான்.

இந்தோ சீனா

இந்தோ சீனா

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான சீனாவும் நமக்கு அத்தனை பெரிய நட்பு நாடு எனச் சொல்ல முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியா சீனா உடனும் போரிட்டு தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவுக்கு இரண்டு நாடுகளுடனும் புகைச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சந்தர்பத்தை தொடர்ந்து சீனா பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு சாட்சி பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரித்து வருவது தான்.

புல்வாமா

புல்வாமா

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, இந்திய துருப்புகள் மீது காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். அந்த சம்பவத்தை ஐநாவில் ஒரு சர்வதேச பயங்கரவாதமாக அறிவிக்க பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைவரையும் கருத்து கேட்ட போது கூட சீனா முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக சீனா, தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான்.

பணம்
 

பணம்

வரும் ஜூன் 2022-க்குள் பாகிஸ்தான், சீனாவுக்கு மட்டும் சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த பணம் வணிக கடனாக சீனா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த பணம். ஆனால் இதில் வேடிக்கை என்ன தெரியுமா..? பாகிஸ்தானுக்கு சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) கொடுத்த கடனை விட, சுமார் இரண்டு மடங்கு கூடுதல் கடனை சீனா கொடுத்து இருக்கிறது.

எப்போது கடன்

எப்போது கடன்

சீனா கிட்ட தட்ட ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இணைக்கும் விதத்தில் கொண்டு வர இருக்கும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் அதிக பயன் அடைந்தது பாகிஸ்தான் தான். அந்த கால கட்டத்தில் பாகிஸ்தான் தன் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள சீனாவிடம் இருந்து அதிகம் கடன் வாங்கியது. அப்போதும் பாகிஸ்தானுக்கு வாங்கிய பணம் போதவில்லை. மேலும் பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கி தன் பொருளாதாரத்தை சமாளிக்க முயன்றது. இன்று வரை பொருளாதாரம் மீண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

பிரச்னை

பிரச்னை

கடன் வாங்கும் போது பாகிஸ்தான் தன் குறுகிய கால நன்மைகளைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு அப்போதைக்கு பாகிஸ்தானின் நிதி நிலையை மேம்படுத்தவே நினைத்து கடன் வாங்கியது. அப்போது நீண்ட காலத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. இப்போது பாகிஸ்தான் வரும் ஜூன் 2022-க்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்கிறார் புர்சின் வாக்மர் (Burzine Waghmar).

 பன்னாட்டு நிதியம்

பன்னாட்டு நிதியம்

அதே மூன்று ஆண்டு காலத்துக்குள், பாகிஸ்தான், சர்வதேச பன்னாட்டு நிதியம் வழங்கிய 2.8 பில்லியன் டாலர் கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆக மொத்தம் சீனாவுக்கு 6.7 பில்லியன் டாலர் + பன்னாட்டு நிதியத்துக்கு 2.8 பில்லியன் டாலர் என மொத்தம் 9.5 பில்லியன் டாலரை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவில் தான் பொருளாதார சூழல் மிகவும் சிக்கலாக இருக்கிறது என்றால் அண்டை நாடான பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதை இந்த கடன் விவரங்களே பளிச்சென உணர்த்துகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan is in crucial stage Pak has to repay around USD 9.5 billion to china IMF

Pakistan government is facing crucial stage. The Pakistan has to repay round 9.5 billion dollars to the Chinese and the IMF. Pakistan borrowed this amount to revive their economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X