வேலை காலி! வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை! மிஞ்சியது மரணம் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிக்காக, இந்த வங்கி மீது மத்திய ரிசர்வ் வங்கி, சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

 

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)இனி எக்காரணத்தை முன்னிட்டும் புதிதாக கடன்களைக் கொடுக்கவோ, கடன்களை ரெனீவ் செய்யவோ, புதிதாக முதலீடுகளைச் செய்யவோ, புதிதாக கடன் வாங்கவோ, புதிதாக டெபாசிட்களை வாங்கவோ, தன் சொத்துக்களை விற்கவோ கூடாது. இப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமான ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்குமாம்.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு விதித்த கட்டுப்பாடுகள் ஒரு பக்கம் இருக்க, இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் எனச் சொல்லி இருந்தது ஆர்பிஐ.

IMF அதிரடி..! இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..!

போராட்டம்

போராட்டம்

வங்கி நிர்வாகத்துக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி வாசலிலேயே போராடிய பிறகு, 1,000 ரூபாயாக இருந்த பணம் எடுக்கும் அளவு 10,000 ரூபாயாகவும், அதன் பின் 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் இப்போது மேலும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் அழுத்தத்தால், ஒரு வங்கிக் கணக்கு வாடிக்கையாளர் தன் வங்கிக் கணக்கில் இருந்து 40,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என வரம்பை அதிகரித்து இருக்கிறார்கள்.

மரணம்

மரணம்

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் பணத்தை இவ்வளவு தான் எடுக்க வேண்டும் என்கிற அதிர்ச்சி செய்தியாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சலால் இரண்டு பேர் மாரடைப்பால் இறந்துவிட்டார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். எல்லோருமே பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள், பெரிய அளவில் பணத்தை டெபாசிட் செய்து இருந்தார்கள் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

முதலாமவர்
 

முதலாமவர்

51 வயது, சஞ்ஜய் குலாதி என்கிற பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் சமீபத்தில் நிலை குலைந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. இவருக்கு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரின் மகன் சிறப்புத் திறன் கொண்டவர் என்பதால், அவருக்கான மருத்துவ செலவுகளுக்காக எப்போதுமே இவருக்கு பணத் தேவை இருந்து கொண்டே இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இரண்டாமவர்

இரண்டாமவர்

அதே போல ஃபதுமல் பஞ்சாபி என்பவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் தன் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்ததை ஏ என் ஐ செய்தி நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்ததில் இருந்தே அதிக மன உளைச்சலில் இருந்தார் என பஞ்சாபியின் குடும்பத்தினர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

தற்கொலை

தற்கொலை

நிவேதிதா பிஜ்லானி என்பவர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை எடுத்துக் கொண்டு, தன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை இவரின் தற்கொலைக்கும் வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகச் சொல்லவில்லை காவல் துறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sanjay gulati lost his job cant withdraw money from pmc bank died heart attack

51-year-old Sanjay Gulati died of cardiac arrest after a protest in the PMC Bank. Sanjay Gulati lost his job with Jet Airways. His life long savings of Rs.90 lakh is with PMC bank. He need cash to pay for medical bills of his specially abled son.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X