பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட்! பிப்ரவரி 2020 வரை கால கெடு! சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தானுக்கு இன்னும் நேரம் சரியாகவில்லை போல் இருக்கிறது. பாகிஸ்தானின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பும், இதுவரை நிலைமை மாறியதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட, மொஹரம் பண்டிகை காலங்களில், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதற்கு மேல் மோசமான பொருளாதார சூழலை வெளிப்படுத்த முடியுமா என்ன..? சரி கடன் பிரச்னைக்கு வருவோம்.

பாகிஸ்தானின் இந்த சிக்கலான நிலைமையை சரி செய்ய, பொருளாதார சிக்கல்களை சரி செய்ய... கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரிய அளவில் கடன் வாங்கி இருக்கிறார்களாம்.

கடன்
 

கடன்

இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு பிரதமராக பொறுப்பு ஏற்று சுமாராக ஒரு வருடம் தான் முடிந்து இருக்கிறது. அந்த ஒரு வருடத்துக்குள் விண்ணைத் தொடும் அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். இம்ரான் கான் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின் மட்டும் மொத்தம் 7,509 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை கடனாக வாங்கி இருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது மேற்கொண்டு கடன் வாங்குவது மற்றும் அன்றாட ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு கூட ஆப்படிக்கும் வகையில் Financial Action Task Force (FATF) அமைப்பினர்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த FATF என்றால் என்ன..?

FATF

FATF

ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்கள் நிறைந்து கிடக்கும் போது, இப்போது Financial Action Task Force (FATF) அமைப்பு வேறு பாகிஸ்தானை மிகக் கடுமையாக எச்சரித்து இருக்கிறது. Financial Action Task Force (FATF) என்கிற அமைப்பு கடந்த 1989 முதல் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு அரசு அமைப்பு (Inter Govt Body). உலக அளவில் பணச் சலவையைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கான நிதி போக்குவரத்துகளை தடுப்பது என சர்வதேச நிதி இயக்கத்துக்கு பிரச்னையாக இருக்கும் அனைத்தையும் சமாளிக்கும் ஒரு அமைப்பு. சரி இவர்களின் முக்கிய வேலை என்ன..?

முக்கிய வேலை

முக்கிய வேலை

இந்த Financial Action Task Force (FATF) அமைப்பின் வேலையே, மேலே சொன்ன தவறுகள் நடக்காத வண்ணம் சட்டம் மற்றும் செயல் திட்டங்களை வகுப்பது, தர நிர்ணயம் செய்வது போன்றவைகள் தான். சொல்லப் போனால் இது ஒரு கொள்கை வரைவுக் குழு (Policy Making Body) என்று சொல்லலாம். இந்த அமைப்பு வகுக்கும் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பார்கள். அப்படி ஒழுங்காக பின்பற்றாதவர்களை ப்ளாக் லிஸ்ட் செய்வார்கள். தற்போது பாகிஸ்தானும் இந்த FATF அமைப்பின் விதிகளை முறையாக பின்பற்றாததால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். சரி, ப்ளாக் லிஸ்ட் செய்தால் என்ன மாதிரியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்

ப்ளாக் லிஸ்ட்
 

ப்ளாக் லிஸ்ட்

ஒரு நாட்டை இந்த Financial Action Task Force (FATF) அமைப்பு பிளாக் லிஸ்ட் செய்தால், அந்த நாட்டுக்கு சர்வதேச அமைப்புகள் கடன் கொடுப்பது தொடங்கி மற்ற நாடுகள் முதலீடு செய்வது வரை எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும். சொல்லப் போனால் அந்த நாடு மற்ற நாடுகளுடன் அன்றாடம் மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மற்றும் வர்த்தகங்கள் கூட பெரிய அளவில் பாதிக்கப்படலாம் எனச் சொல்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு என்ன

பாகிஸ்தானுக்கு என்ன

இப்போது Financial Action Task Force (FATF) அமைப்பு, உலக நாடுகள் தங்கள் நிதித் துறையில் 27 விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி இருக்கிறது. அந்த 27 விதிகளில், பாகிஸ்தான் 05 விதிமுறைகளைத் தான் சரியாக கடை பிடிக்கிறார்கள் என Financial Action Task Force (FATF) அமைப்பினர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்படி FATF அமைப்பின் அனைத்து விதிமுறைகளையும், வரும் பிப்ரவரி 2020-க்குள் முழுமையாகவும், ஒழுங்காக நடைமுறைப் படுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படும் எனவும் எச்சரித்து இருக்கிறார்கள்.

ப்ளாக் லிஸ்ட் நாடுகள்

ப்ளாக் லிஸ்ட் நாடுகள்

இன்று உலக அளவில், சர்வாதிகார நாடாக வலம் வரும் வட கொரியா மற்றும் பழமைவாத நாடாக இருக்கும் ஈரான் என மொத்தம் இரண்டு நாடுகள் மட்டும் தான் இந்த FATF அமைப்பால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 2020-க்குள் பாகிஸ்தான் இந்த FATF அமைப்பின் 27 விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றவில்லை என்றால், பாகிஸ்தானும் இந்த இரண்டு நாடுகள் உடன் சேர்க்கப்படலாம்.

பாகிஸ்தான் பொருளாதாரம்

பாகிஸ்தான் பொருளாதாரம்

சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF - Internation Monetary Fund) கணிப்பின் படி பாகிஸ்தானின் பொருளாதாரம் 2019-ம் ஆண்டில் 3.3 சதவிகிதமாகவும், 2020-ம் ஆண்டில் 2.6 சதவிகிதமாகவும் வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 3.9 சதவிகிதமாக இருந்தது, இப்போது 2019-ல் 7.3 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவிகிதத்தைத் தொடலாம் எனக் கணித்திருக்கிறது ஐ எம் எஃப்.

நிதி நிலை

நிதி நிலை

இதை எல்லாம் விடக் கொடுமை என்ன என்றால் பாகிஸ்தானின் மொத்த ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 7.1 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறதாம். இது கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் எனவும் சொல்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின் கணக்குப் படி, பாகிஸ்தான் நாட்டின் கடன் சுமார் 31.786 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது. அதுவும் கடந்த ஜூன் 2019 வரையான கணக்கு தானாம்.

கடன் உயரும்

கடன் உயரும்

ஏற்கனவே பாகிஸ்தானிய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் (பாகிஸ்தான் நாட்டின்) கடன் அளவு, 31.78 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாயில் இருந்து, சுமாராக 13.7 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம். அதாவது, தற்போது இருக்கும் கடனை விட சுமார் 47 சதவிகிதம் கடன், மேலும் அதிகரிக்க இருக்கிறது. ஆக பாகிஸ்தான் அரசின் கணிப்புகள் படி 5 ஆண்டுகள் முடிவில் பாகிஸ்தானின் மொத்த கடன் சுமாராக 45 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவைத் தொடலாம்.

பாக் நிதி அமைச்சர்

பாக் நிதி அமைச்சர்

கடந்த ஏப்ரல் 2019-ல் தான் "பாகிஸ்தான் நாட்டின் அடிப்படை கடன்களின் அளவு நம்மை பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. சொல்லப் போனால் பாகிஸ்தான் கிட்ட தட்ட திவால் ஆகும் நிலையில் இருக்கிறது" எனச் சொல்லி இருந்தார் பாகிஸ்தானின் நிதி அமைச்சர் ஆஸாத் உமர். இப்படி ஒரு நாட்டின் நிதி அமைச்சரே தன் நாடு திவால் ஆகும் நிலையில் இருக்கிறது எனச் கதறுவது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இப்படி இத்தனை பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் FATF அமைப்பின் ப்ளாக் லிஸ்டில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டால், பாகிஸ்தான் நினைத்தது போல் கடன் எல்லாம் வாங்க முடியாமல் போகும். அவ்வலவு ஏன் சீனா கூட பாகிஸ்தானின் முதலீடு செய்வது சிரமமாக இருக்கும். ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரமும் சீர்குலையும். எனவே இந்த சிக்கல்களில் இருந்து பாகிஸ்தான் விடுபட வேண்டும் என்றால் FATF அமைப்பினர் சொல்வதைப் போல தீவிரவாதிகளுக்கு நடக்கும் பணப் போக்குவரத்து முழுமையாக தடுக்க வேண்டும். இல்லை என்றால் பாகிஸ்தான் அரசு அதற்கான விலையை சர்வதேச அரங்கிலும் கொடுக்க வேண்டி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan got warning on terror funding Pak to rectify or face consequences

The FATF body warned Pakistan on fight against terror financing on Friday and said that Pakistan failed on most “action items" prescribed for it. So if Pakistan did not follow action items then it may face blacklisting.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more