அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜம்மு : எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என நீடித்து வரும் பிரச்சனையால் தான் மக்கள் வங்கிகளை நாடி தங்களது சிறுசேமிப்புகளையும், முதலீடுகளையும் செய்து வருகின்றனர். ஆனால் வங்கிகளின் மீதான நம்பிக்கையையே குலைக்கும் விதமாக அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே பி.எம்.சி வங்கியில் நடந்த மோசடி இன்னும் ஆராத நிலையில் தற்போது ஜம்மு & காஷ்மீர் வங்கியில் 1,100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் இது பற்றி கடந்த சனிக்கிழமையன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பெருந்தொகையை இவ்வங்கி Rice Exports India (REI) Agro Ltd நிறுவனத்திற்கு ஊழல் செய்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

வங்கி அதிகாரிகள் வீட்டில் தேடல்
 

வங்கி அதிகாரிகள் வீட்டில் தேடல்

இது குறித்து எஃப்.ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட உடனேயே, காஷ்மீரில் ஒன்பது இடங்களிலும், ஜம்முவில் 4 இடங்களிலும், டெல்லியில் மூன்று இடங்களிலும், அதன் முன்னாள் தலைவர் முஷ்டாஜ் அஹ்மத் ஷேக் உள்பட குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் உள்ளபட ஒரு டஜன் வங்கி அதிகாரிகள் வீட்டிலும் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும், ACBயின் செய்தித் தொடர்பாளர் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர் விசாரணை

தொடர் விசாரணை

இது தவிர டெல்லியில் ரைஸ் எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா மற்றும் அதன் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சந்தீப் ஜூன்ஜூன்வாலா ஆகியோரின் வீடுகளும் தேடப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகவும், மேலும் மூன்று அணிகள் தொடர்ந்து தேடல்களை நடத்தி வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் கடன்

போலி ஆவணங்கள் மூலம் கடன்

மும்பையின் மஹிம் மற்றும் டெல்லியின் அன்சால் பிளாசாவில் உள்ள வங்கியின் கிளைகளின் அதிகாரிகள் போலி ஆவணங்களின் அடிப்படையிலும், வங்கி அதிகாரங்களை மீறியும் 800 கோடி ரூபாய் கடன் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஏசிபி ஒரு ஆரம்ப விசாரணையை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2011 - 2014க்கு இடையிலான வங்கி நடைமுறைகளினால், 2014ல் இவை செயல்படாத சொத்துகளாக மாறியது என்றும், இதனால் இவ்வங்கிக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அலுவலகமே இல்லாமல் கடன்
 

அலுவலகமே இல்லாமல் கடன்

இதில் கவனிக்கப்பட வேன்டிய விஷயம் என்னவெனில் கொல்கத்தாவில் அதன் தலைமையிடத்தையும், புதுடெல்லியில் அதன் கார்ப்பரேட் அலுவலகத்தையும் கொண்டுள்ள ரைஸ் எக்ஸ்போர்ட் இந்தியா, மும்பையில் அதன் அலுவலகம் இல்லாவிட்டாலும், மும்பையில் மஹிம் வங்கி கிளையை கடனுக்காக அணுகியது தான். மும்பையில் கிளை இல்லாவிட்டாலும், இந்த ரைஸ் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு ஆதராவாக ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி 550 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டு சதி

கூட்டு சதி

இதே புதுடெல்லியில் உள்ள வசந்த் விகார் கிளையிலும் 139 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடன் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதற்காக என்றும், மஹிம் மற்றும் வசந்த் விகார் கிளைகளில் அணுகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல் உற்பத்திக்காக விவசாயிகளிடையே கடன் தொகை வழங்கப்பட வேண்டும் என்பது வங்கி அதிகாரிகளுக்கும், நிறுவனத்திற்கும் தெரிந்திருந்தாலும், இந்த நிறுவனம் வங்கி அதிகாரிகளுடன் இணக்கமாக இருந்து விதிகளை மீறியதாகவும், இதன் மூலமே இந்த கூட்டு சதி நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை

ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை

இந்த மோசடியில் இந்த நிறுவனத்தின் சில ஆவணங்களையும், வங்கி சரிபார்க்கப்படவில்லை என்றும், மேலும் இந்த கடன் தொகையை அதன் சொந்த நலனுக்காக திசை திருப்ப உதவுவதே இதன் நோக்கம் என்றும், மேலும் இந்த வங்கி நபார்டு வழி காட்டுதல்களையும் மீறியது என்றும், அதன் படி இந்த ஜே.எல்.ஜிகளின் உறுப்பினர்கள் ஒரே பகுதி அல்லது கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், ஆனால் இந்த வங்கி இதையும் புறக்கணித்ததாகவும், இதை வங்கி அதிகாரிகளால் வேன்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட ஒன்று என்றும் ஏசிபி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மோசடி குறித்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை

மோசடி குறித்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை

மேலும் இந்த மோசடி குறித்தான சான்றிதல்களிலே ஆவணங்களிலோ இது வரை யார் இதை செய்தார்கள் என்றும், நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த கடன்கள் மஹிம் மற்றும் வசந்த் விகார் கிளைகளில் வங்கி அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டது என்றும், மேலும் அப்போதைய வங்கியின் தலைவரான முஷ்டாக் அஹ்மத் ஷேக்கின் ஆதரவினால் தரப்பட்டது என்றும் கூறப்பட்டாலும், இன்னும் சரியான ஆவணங்கள் கிடைக்காததால் விசாரணை நடைப்பெற்று கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வங்கிக்கு இழப்பு எவ்வளவு?

வங்கிக்கு இழப்பு எவ்வளவு?

இது குறித்து ஏசிபி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நிறுவனத்துற்கு ஊழல் செய்து நேர்மையற்ற முறையில் பெரும் கடன் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதன் விளைவாக இந்த வங்கிக்கு 1124.45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாகவே பிஎம்சி சதியினால் வங்கியின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இதேபோன்ற ஊழல் நடந்திருப்பது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

J&K Bank loan fraud: ACB lodges FIR in Rs.1,100 cr scam, and its told dozen of bank officials involved in this scam

J&K Bank loan fraud: ACB lodges FIR in Rs.1,100 cr scam, and its told dozen of bank officials involved in this scam, Total huge loss of Rs.1124.45 crore to this bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more