முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அடுத்த 2020ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் உள்ள KG-D6 block புதிய எரிவாயு தொகுதியில் இருந்து உற்பத்தியைத் தொடங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

 

மேலும் கடந்த ஜூன் 2017ல் ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் கூட்டாளர் நிறுவனமான இங்கிலாந்தின் BP Plc நிறுவனமும் மூன்று தொகுதிகளில் உற்பத்திக்காக 40,000 கோடி முதலீடு செய்வதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..!

இந்த புதிய உற்பத்தி தொகுதியால் ஒரு நாளைக்கு மொத்தம் 30 - 35 மில்லியன் கியூபிக் மீட்டர் கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே களத்தில் உள்ள ஆறு கிணறுகளையும் துளையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சப்ஸீ உற்பத்தி செய்வதற்கான செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சேட்டிலைட் கிளஸ்டரில் உள்ள ஐந்து கிணறுகளில் மூன்றில் துளையிடுதல் நிறைவடைந்துள்ளது என்றும், இந்த மூன்று கிணறுகளில் இருந்து 2021ம் ஆண்டு உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸை பொறுத்த வரை இதுவரை KG-D6 blockல் 19 எரிவாயு கண்டுபிடிப்புகளை செய்துள்ளது என்றும், இவற்றில் டி-1 மற்றும் டி3 கடந்த ஏப்ரல் 2009 முதலே உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் உள்ள ஒரே எண்ணெய் வயலிலும், கடந்த செப்டம்பர் 2008 முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த டி-1 மற்றும் டி-3 தொகுதிகளில் கடந்த மார்ச் 2010 அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 54 மில்லியன் ஸ்டேண்டர்டு கியூபிக் மீட்டர்ஸ் கேஸ் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே ஜூலை - செப்டம்பரில் 1.68 mmscmd உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே கடந்த ஏப்ரல் - ஜூன் 2019ல் 1.76 mmscmd கேஸ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

 

இந்த நிலையில் சவுதி அராம்கோவுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக அங்கு எந்த பிரச்சனை நிலவி வந்தாலும், தங்களுக்கு சவுதி அராம்கோவிடம் இருந்து சரியான இறக்குமதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.

உதாரணத்திற்கு சவுதி அராம்கோவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்ட நிலையிலும் கூட எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதி பாதிக்கப்படுமோ என்று கவலையில் இருந்த நேரத்தில் கூட, இறக்குமதி தடையில்லாமல் இருந்ததாக அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியையும் பலப்படுத்த இந்த நிறுவனம் தற்போது இதுபோன்ற நடைமுறைகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance industries officially said plan to start production from new gas field on next year

Reliance industries officially said plan to start production from new gas field on next year. And they said Reliance and its partner BP Plc had 2017 announced an investment of Rs 40,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X