நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..! கொண்டாட்டத்தில் பஜாஜ் ஃபனான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 63% அதிகரித்து 1,504 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் முந்தைய ஆண்டில், இதே காலாண்டில், 923 கோடி ரூபாயை நிகர லாபமாக பதிவு செய்திருந்தது.

 

செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி மொத்த வாராக் கடன் மற்றும் நிகர வாராக் கடன் 1.61 % மற்றும் 0.65 % ஆக இருக்கின்றன. ஐஎல் அண்ட் எஃப்எஸ் (IL&FS) கணக்கை சரி செய்த பின் ஜிஎன்பிஏ மற்றும் என்என்பிஏ 30 செப்டம்பர் 2019 நிலவரப்படி 1.44 % மற்றும் 0.52 % ஆக இருக்கின்றன.

நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..! கொண்டாட்டத்தில் பஜாஜ் ஃபனான்ஸ்..!

கடந்த ஜூலை செப்டம்பர் 2019 காலாண்டில் புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் பணி வேகம் எடுத்திருக்கிறதாம். இந்த காலாண்டில் மட்டும் சுமாராக 1.92 மில்லியன் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பிடித்து இருக்கிறார்களாம். 30 செப்டம்பர் 2019 நிலவரப்படி மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.70 மில்லியனாக இருக்கிறதாம். இது கடந்த செப்டம்பர் 2018-ஐ ஒப்பிடும் போது 29 % வளர்ச்சியாம்.

அதோடு பஜான் ஃபனான்ஸ் நிறுவனத்தின் கையில் இருக்கும் பணம் (ரொக்கம் மற்றும் எளிதில் ரொக்கமாக்கக் கூடிய முதலீடுகள்) 30 செப்டம்பர் 2019 நிலவரப்படி, 8,043 கோடி ரூபாயாக இருக்கிறதாம். எனவே பஜான் ஃபனான்ஸ் நிறுவனத்துக்கு தற்போது லிக்விடிட்டி பிரச்னை இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

பஜாஜ் நிதி Q2 வருவாயின் சிறப்பம்சங்கள்:

நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சொத்துக்கள் 38% உயர்ந்து 1,35,533 கோடி ரூபாயாக உள்ளது.

39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்..! 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..!

இந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புதிய கடன்கள், 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் 5.26 மில்லியனிலிருந்து 23% அதிகரித்து 6.47 மில்லியனைத் தொட்டிருக்கிறதாம்.

 

2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 48% அதிகரித்து 3,999 கோடி ரூபாயாக இருக்கிறதாம். கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 2,708 கோடியாக இருந்ததாம்.

2019 - 20 நிதி ஆண்டுக்கான செயல்பாட்டுச் செலவுகள் நிகர வட்டி வருமானத்துடன் ஒப்பிட்டால் 34.6 சதவிகிதமாக இருக்கிறதாம். இதே கடந்த 2018 - 19 இரண்டாம் காலாண்டை எடுத்துப் பார்த்தால், 35.4% ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bajaj Finance company 20FY 20 Q2 net profit zoomed 63 percent

Bajaj Finance company report 63 percent surge in its net profit for the FY 2020 Sep quarter. Bajaj Finance had posted a net profit of ₹1,504 crore in this quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X